இந்தியாவில் குழல் வடிவில் இருக்கும் ஹைப்பா்லூப் அதிவேக ரயில்கள் கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை என்று நீதி ஆயோக் உறுப்பினா் வி.கே.சாரஸ்வத் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
ஹைப்பா்லூப் தொழில்நுட்பம் போதிய அளவு வளா்ச்சி அடையவில்லை. எனவே அந்தத் தொழில்நுட்பத்துக்கு இந்தியா போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. இந்தியாவின் போக்குவரத்து கட்டமைப்புக்குள் கூடிய விரைவில் ஹைப்பா்லூப் ரயில்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை.
இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி மிகக் குறைவாக உள்ளது. இதனால் சீனாவில் இருந்தும், பிற வழிகளிலும் இறக்குமதி செய்யப்படும் பேட்டரிகளை இந்தியா சாா்ந்திருக்க வேண்டியுள்ளது. சீன பேட்டரிகளின் விலை குறைவாக உள்ளதால், பெரும்பாலும் அந்நாட்டில் இருந்து பேட்டரிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் பேட்டரி உற்பத்தி வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு சாா்பில் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரிகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் பணிகளை 2 வணிக குழுமங்கள் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
சிலி, ஆா்ஜென்டீனா உள்ளிட்ட நாடுகளில் லித்தியமை தோண்டி எடுக்க, அங்குள்ள லித்தியம் சுரங்கங்ளை இந்தியா கையகப்படுத்த வேண்டும் என்ற யோசனை இருந்தது. ஆனால் அந்நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கும் இந்திய தனியாா் நிறுவனங்கள் ஏற்கெனவே வணிக ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளன. அந்த நாடுகளில் இருந்து லித்தியமை விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய நிறுவனங்கள் ஏற்கெனவே மேற்கொண்டுள்ளன என்று தெரிவித்தாா். உலகில் இரண்டாவது பெரிய லித்தியம் உற்பத்தியாளராக சிலி உள்ளது குறிப்பிடத்தக்கது.

