Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வாழ வந்த இடத்தில் வன்முறை..! – விரைவில் பாத்ரூமில் வழுக்கி விழுவார்களா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சென்னை | மது வாங்க கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு ரவுடியை காரில் கடத்திய 5 பேர் கும்பல் கைது
37
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரவாக்கம், வடக்கு பகுதி 11- வது தெருவில், பிளாஸ்டிக் பக்கெட்டுகள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது.

இங்கு கடந்த அக். 23-ம் தேதி மாலை ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அதில், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 200 தொழிலாளர்கள் பங்கேற்றனர். பூஜை முடிந்ததும் அவர்கள் மது போதையில் இரு பிரிவுகளாக பிரிந்து மோதிக் கொண்டனர். கல், கட்டை, இரும்பு கம்பி ஆகியவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து விசாரிக்க சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை தலைமை காவலர் ரகுபதி, போலீஸார் ராஜ் குமார், கிரி ஆகியோரை மது போதையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சூழ்ந்து கொண்டு தடியால் தாக்கினர். இதில், காயமடைந்த ரகுபதி, கிரி இருவரும் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ரோந்து வாகனத்தில் அங்கு சென்ற போலீஸாரையும் பிஹார் தொழிலாளர்கள் விரட்டி அடித்தனர்.

இது குறித்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார், கும்பலாக கூடி தாக்குதல் நடத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், போலீஸாரை தாக்கிய மேலும் 28 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களை பிடிக்க நேற்று முன் தினம் இரவு அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த துகி ராஜ் வன்சி, மனோஜ் ராஜ் வன்சி, கணேஷ் லால் ராஜ் வன்சி, மதன் குமார், முகேஷ் ராஜ் வன்சி, சந்தன், உபேந்திரா விகாஷ் குமார் உள்ளிட்ட 28 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க காவல் துறை அதிகாரிகள் இங்குள்ள நிறுவனங்களுடன், கூட்டங்கள் நடத்தி ஆலோசித்து நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆராய்ந்த பின்னர் தான் இது போன்ற சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

.

Tags: அமபததரகததககயதகதழலளரகளதழறபடடயலபலஸரபஹரமநல
Previous Post

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் கற்கள், மதுபாட்டில்களை வீசிய 4 பேர் கைது

Next Post

குருபூஜைக்கு வந்த இளைஞர் காரிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குருபூஜைக்கு வந்த இளைஞர் காரிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

குருபூஜைக்கு வந்த இளைஞர் காரிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    வர மாநிலத்தவர்கள் இடையே ஒழுக்கமே கிடையாது மேலும் சுத்தமும் கிடையாது ரயிலில் சென்றால் டிக்கெட் எடுப்பது கிடையாது எங்கும் கூட்டமாக சென்று ரிசர்வேஷன் பெட்டிகளில் ஏறி கொண்டு அடாவடி செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் தற்பொழுது தமிழக காவல்துறையையே தாக்கியுள்ளனர் போலீசையே தாக்கும் இவர்கள் பொதுமக்களை என்ன பாடு படுத்துவார்கள் காவல் துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுத்து மக்கள் ஆணையம் சொல்வது போல் அவர்கள் அனைவரும் பாத்ரூமில் வழுக்கி விழ வேண்டுகிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In