அகமதாபாத்: குஜராத்தின் மோர்பியில், 13 வயது சிறுமியை வீடியோ அழைப்பில் ஆடைகளை அவிழ்க்க வற்புறுத்தி மிரட்டி அவரது இன்ஸ்டாகிராம் நண்பர்கள் ரூ.70,000 பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவள் பள்ளிக்கு செல்ல மறுத்து மனமுடைந்து இருந்ததை அவளது தாயார் கவனித்ததை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மூன்று மாதங்களுக்கு முன்பு அவளுக்கு ஒரு ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளனர் . 9-ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவி இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார். மிட்டல் சோலங்கி எனும் பெண் இந்த மாணவிக்கு ப்ரண்டு ரிக்வஸ்ட் அனுப்பி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார் . அப்போது அந்த பெண், சிறுமியை கிஷன் பட்டேல் (19) என்ற வாலிபரிடம் அறிமுகப்படுத்தி, அவனுடன் நட்பை வளர்க்கும்படி கூறியுள்ளார். இருவரும் அரட்டை அடிக்க ஆரம்பித்து இரண்டு மாதங்களாக இந்த இணையதள நட்பு தொடர்ந்தது.
ஒரு நாள், மோர்பியில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் உள்ள ஒரு கோவிலில் சந்திக்க அந்த பெண்ணை படேல் அழைத்தார். பின்னர் அவர் அனுமதியின்றி ஒரு புகைப்படத்தை கிளிக் செய்து, மானபங்கம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பரப்புவேன் என்று மிரட்டத் தொடங்கினார். வீடியோ அழைப்பில் ஆடையை கழற்றுமாறு கட்டாயப்படுத்தி அதையும் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
“கிஷன் பட்டேல் அவளிடம் பணம் கேட்டு சமூக வலைதளங்களில் உனது நிர்வாண வீடியோக்களை பரப்புவதாக மிரட்டினார். சிறுமி தனது வீட்டின் அலமாரியில் வைத்திருந்த ரூ. 70,000 ரொக்கம் மற்றும் அவரது தாயின் தங்க காதணிகளையும் அடகு வைத்து பணம் அனுப்பியுள்ளாள்.
புகாரின் பேரில், போலீஸார் படேலை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இதற்கிடையில், மிட்டல் சோலங்கி இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் மீது பிரிவுகள் 384 (பணம் பறித்தல்), 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்), 354 டி (பாலியல் மிரட்டல்), மற்றும் போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த சிறுமி சம்பந்தப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட மற்றும் கைது செய்யப்பட வேண்டிய நபர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் பிரிவுகளில் போட்டோ மட்டுமே கொடுங்குற்றமானது மற்ற அனைத்து பிரிவுகளும் சாதாரண வகையைச் சார்ந்தது இருப்பினும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்ததும் மற்றவரை தேடி வருவதும் ஆறுதல் தருகிறது. பெற்றோர்களும் குழந்தைகளுக்கு சிறுமிகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்ததோடு சரி என்று விடாமல் அவர்களை கண்காணிக்க வேண்டும் அவரது செல்போன்களையும் ஆய்வு செய்ய வேண்டும் அப்படி இருக்கும்போது இது போன்ற குற்றங்கள் இதோ போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம்