Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

புரோக்கருடன் கைதான பெண் மருத்துவர் – வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 16, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
புரோக்கருடன் கைதான பெண் மருத்துவர் – வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
109
SHARES
176
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த விசைத் தறி தொழிலாளி தினேஷ் – நாகஜோதி தம்பதியருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி அவர்களுக்கு அங்குள்ள சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். அங்கு குழந்தைக்கு மகப்பேறு மருத்துவர் அனுராதா சிகிச்சை அளித்துள்ளார்.

பெண் குழந்தையின் பெற்றோர் பற்றிய விவரங்கள், அவர்களின் பொருளாதார நிலையை தெரிந்துகொண்ட மருத்துவர் அனுராதா, அவர்களின் ஏழ்மை நிலையை தெரிந்துகொண்டு குழந்தைகளை விற்கும் புரோக்கராக செயல்பட்ட கரூர் லோகாம்பாள் என்பவருக்கு தகவல் சொல்லியுள்ளார். உடனே திருச்செங்கோடு மருத்துவமனைக்கு வந்த லோகாம்பாள், குழந்தையின் பெற்றோரிடம் 3 லட்சம் ரூபாய் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி குழந்தையை விற்கும்படியும் வற்புறுத்தியுள்ளார்.

ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த குழந்தையின் பெற்றோர் நாமக்கல் ஆட்சியர் உமா மற்றும் எஸ்.பியிடம் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருச்செங்கோடு காவல் துறையினர் மருத்துவர் அனுராதா மற்றும் இடைத்தரகர் லோகாம்பாள் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்திருப்பதும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சட்டவிரோதமாக சிறுநீரக தானம் செய்ய ஆள் பிடித்து கொடுத்துள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் மேலும் 10 பேருக்கு தொடர்பிருக்கலாம் என்று சந்தேகப்படும் காவல் துறை, அவர்களை கைது செய்யவும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. சிகிச்சைக்காக வந்த பெற்றோரிடம் ஆசைவார்த்தை கூறி குழந்தையை விற்க முயன்ற சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பெண் குழந்தையை விற்பனை செய்ய மருத்துவர் அனுராதா மற்றும் புரோக்கர் லோகாம்பாள் முயற்சி செய்ததும், சட்ட விரோத சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறை மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

மேலும், விசாரணை முடிவில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், மருத்துவர் அனுராதாவை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் விளக்கியுள்ளார்.

Previous Post

கஞ்சா கடத்தல் வழக்கில் ரவுடி உட்பட 5 பேருக்கு 10 ஆண்டு சிறை: உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

Next Post

ஜெய் ஸ்ரீராம் கோஷம்.. ராமருக்கும், கிரிக்கெட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா..?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜெய் ஸ்ரீராம் கோஷம்.. ராமருக்கும், கிரிக்கெட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா..?

ஜெய் ஸ்ரீராம் கோஷம்.. ராமருக்கும், கிரிக்கெட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In