மதுரை விளாச்சேரி பகுதி உள்ள ஆதி சிவன் நகரில் அக்ஷயா டிரஸ்ட் சார்பாக ஒன்பதாம் ஆண்டு உலகமுன் நோய் தடுப்பு தின கொண்டாட்டம் 15 அக்டோபர் நடைபெற்றது.

இந்த உலக நோய் தடுப்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம்,மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் ரத்தினவேல், வடமலையான் மருத்துவமனை நிறுவனத் தலைவர் புகழகிரி , வடமலையான் ,மதுரை உணவு பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் ஜெயராமபாண்டியன் , மருத்துவக் கல்லூரி பேராசிரியர் கல்யாண சுந்தரம் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் தலைமை தாங்கினார், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் பேசுகையில்..
அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும்போது சிகிச்சை வரும் நோயாளியுடன் ஒருவர் கூட இருந்தால்தான் எங்களால் சிறப்பான மருத்துவ சேவை செய்ய முடியும். ஏனென்றால் அரசு மருத்துவமனையில் 3300க்கும் மேற்பட்ட படுக்கை நோயாளிகள் உள்ளனர். 6000 பேர் வரை வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.
நோயாளிகளை சமாளிப்பதற்கு உண்டானவை நிறைய சாவல்கள் இருக்கின்றது. இப்பொழுது ஒரு விபத்து ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம் அதில் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது அவர் நினைவுடன் இருந்தால் சரி, அது அப்புறம் நினைவில்லாமல் இருந்தால் எங்கள் மருத்துவ சேவையும் தாண்டி தனிநபர் சேவையையும் தர எங்களிடம் மேன்பவர் இல்லை.
உறவினர்கள் யாரும் இல்லாமல் தனி நபராக சிகிச்சை பெற்று வரும் கேன்சர் மற்றும் பல்வேறு பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு அவர்களை கவனித்துக் கொள்ள எங்களுக்கு தனி சவாலாக உள்ளது. மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் நோ அட்டெண்டர் பேஷண்ட்களை இரண்டு கேட்டகிரிகளாக பிரித்து மனம் நிலை உள்ளவர்கள் மனம் குன்றியவர்கள் என்று பிரித்து அவர்களுக்கு எங்கள் செவிலியர்கள் மூலம் தனி சேவை வழங்கி வருகிறோம்.
அதைப் போன்று இது போன்ற அக்ஷயா டிரஸ்ட் இல்லங்களும் தனிநபர் சேவை வழங்கி வருகிறது என்று நாங்கள் வரவேற்கிறோம். இன்னும் பத்து வருடங்களில் அக்ஷயா டிரஸ் போன்ற இடங்கள் மிகப்பெரிய தேவையானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

