Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அன்னை பாத்திமா கல்லூரியில் அனைத்து கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற தடய அறிவியல் கருத்தரங்கம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 14, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அன்னை பாத்திமா கல்லூரியில் அனைத்து கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற தடய அறிவியல் கருத்தரங்கம்..
193
SHARES
312
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சதாசிவம், அரசு மருந்தியல் கல்லூரி முதல்வர் அப்துல் ஹசன் சாதலி, தியாகராஜர் கல்லூரி பேராசிரியர் சாய் கண்ணன் உரையாற்றினர்

திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தடய அறிவியல் துறை சார்பாக அனைத்து கல்லூரி மாணவ- மாணவியர்கள் பங்கேற்ற பாரன்சிக் பீயூசன் – 2023 என்ற ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா மற்றும் பொருளாளர் சகிலா ஷா ஆகியோரது ஆலோசனையின் பேரில் நடைபெற்றது. கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து உரையாற்றிய கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், உண்மையான குற்றவாளியை அடையாளம் காணவும், குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வாங்கி தரவும், தடய அறிவியல் துறை சார்ந்தவர்கள் காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் உற்ற துணையாக இருக்கின்றார்கள். எனவே தடய அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள் தங்களுடைய விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஒரு சார்பு இல்லாமல் பணியாற்றி உண்மையான குற்றவாளி தப்பிக்காமலும், நிரபராதி தண்டிக்கப்படாமலும் இருக்க சரியான முறையில் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

காலையில் நடந்த துவக்க விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரசு மருந்தியல் கல்லூரி முதல்வர் டாக்டர். அப்துல் ஹசன் சாதலி, தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் குற்றங்களும் தொழில்நுட்ப ரீதியாக பெருகிவிட்டபடியால், தடய அறிவியல் துறையினரின் தேவை அதிகமாக உள்ளது என்றும், சைபர் கிரைம் போன்ற குற்ற வழக்குகளை துப்பு துலக்குவதற்கு தடைய அறிவியல் துறை சார்ந்த நிபுணர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள் எனவும், ஆகவே மாணவர்கள் தடய அறிவியலின் அனைத்து துறையிலும் நிபுணத்துவம் பெற வேண்டும் எனவும் கூறினார்.

முன்னதாக தடய அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார். துவக்க விழாவை தொடர்ந்து, பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்திருந்த மாணவர்கள் தங்களுடைய ஆராய்ச்சி கட்டுரைகளை வாசிக்கவும், அறிவியல் சார்ந்த விளக்கங்கள் அடங்கிய போஸ்டர்கள் மூலமாக தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்தனர்.

மதிய உணவு இடைவேளைக்கு பின் நடந்த அமர்வில், மதுரை மருத்துவக் கல்லூரி தடய அறிவியல் துறையைச் சார்ந்த பேராசிரியர் டாக்டர் சதாசிவம், தியாகராஜர் கல்லூரி வேதியியல் பேராசிரியர் டாக்டர். சாய் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு துறை சார்ந்த தற்போதைய முன்னேற்றங்கள் பற்றி கம்ப்யூட்டர் ஸ்லைடுகள் மூலம் எடுத்துரைத்தனர். பின்னர் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தவர்களுக்கும், போஸ்டர்கள் மூலம் சிறந்த விளக்கத்தினை அளித்த மாணவ-மாணவியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியை மூன்றாம் ஆண்டு மாணவி வர்ஷா மற்றும் அஸ்மா பாத்திமா ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் நிவேதிதா மனோகரன், ஜிஞ்சு மரியம் இமானுவேல், வினிஸ்மா, பிரிசில்லா ஜோஸ்லின் டேனியல், ஜெயஸ்ரீ, கங்கா பிரசாத், அலி பாத்திமா, ஐஸ்வர்யா ஆகியோர் தலைமையில் மாணவ- மாணவியர்கள் கோகுல், ஜோதி முருகன், ரேஷ்மா, சுபாஷினி, சந்தோஷ் சர்மா, தருண், ரகுமான் அலி, தாமோதரன் உள்ளிட்டோர் செய்தனர். கருத்தரங்கில் மதுரை மன்னர் திருமலை நாயக்கர், அல்ட்ரா, நாகரத்தினம் அங்காளம்மாள் கல்லூரிகளிலிருந்தும், பெரம்பலூர் ஸ்ரீனிவாசன் கல்லூரி, மங்களூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசா கல்லூரிகளில் இருந்தும் 85 பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் உட்பட 400 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியர் பிரிசில்லா நன்றி கூறினார்.

Previous Post

விழுப்புரத்தில் காந்திசிலை அருகே உள்ள வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Next Post

‘என்வுன்டர் கொலைகளை தடுத்து நிறுத்திடுக’ –  தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘என்வுன்டர் கொலைகளை தடுத்து நிறுத்திடுக’ -  தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

‘என்வுன்டர் கொலைகளை தடுத்து நிறுத்திடுக’ -  தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In