மாதவரம்: செங்குன்றம் அடுத்த கோடு வள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உள்ளது. இந்த மின் பகிர்மான கழகத்தின் மூலமாக 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த மின் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் மின்கம்பங்கள் சிதிலமடைந்து எலும்பு குண்டு போல் நிற்கின்றன.

இதனால் பொதுமக்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். இது குறித்து புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுப்பதில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். மின் பொறியாளர் கோபிநாத் கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கே பணி செய்து வருகிறார்.
இதுவரைக்கும் இவர் மின் இணைப்பு வழங்கிய இடமெல்லாம் அரசுக்கு சொந்தமான நீர் நிலை மெய் கால் புறம்போக்கு மற்றும் அரசு அனுமதி இல்லாமல் இயங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கி விடுவார், ஆனால் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு மின்கம்பம் சேதமடைந்தாலோ மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ பொதுமக்கள் புகார் அளித்தால் எந்த விதமான நடவடிக்கை எடுக்க மாட்டார் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தற்போது அலமாதி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் பரிதாப நிலையில் உள்ளது. மின் பொறியாளர் கோபிநாத் மீது பொதுமக்கள் மிகவும் விரக்தியில் உள்ளனர். நீர்நிலைகள் அரசு புறம்போக்கு இடங்களுக்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என்று கடந்த 24.4.2023 பொன்னேரி வட்டாட்சியர் எழுத்துப்பூர்வமாக சர்வே. என்.213.219.222. இடங்களுக்கு உத்தரவினை பிறப்பித்தார். இவர் வட்டாட்சியர் உத்தரவை மீறி புறம்போக்கு இடங்களுக்கு மின் இணைப்பு வழங்கி வருகிறார் என்கின்றனர்.
ஆகவே இந்த மின் பொறியாளர் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமங்களுக்கு சிதிலமடைந்த மின் கம்பங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்றுகிராம பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்..


ஒரு மின் கம்பம் தகுதியற்ற நிலையில் இருந்தால் அது மீது புகார் வரும் பட்சத்தில் 24 மணி நேரத்தில் அந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு உள்ளது எனவே அந்த AE யிடம் எழுத்துப்பூர்வமான புகார் கொடுங்கள் கொடுத்து ஒரு மூன்று அல்லது நான்கு நாட்கள் பாருங்கள் அவர் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மேற்பார்வை என்ஜினியர் SE அப்படி என்று சொல்வார்கள் அவரிடமும் எழுத்து மூலமாக புகார் மனுவை கொடுங்கள் இரண்டாவது ஆக அவர் புறம்போக்கு நிலங்களுக்கு அந்த பகுதியில் உள்ள தகுதியற்ற வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுப்பதாக சொல்கிறீர்கள் அது உண்மை எனில் அந்த மின் இணைப்பு பற்றிய விவரங்களுடன் ஒரு புகார் மனுவை தயார் செய்து மின்வாரிய தலைமை அலுவலகம் அண்ணா சாலை சென்னை இல் உள்ள மின்வாரிய விஜிலென்ஸ் பிரிவிற்கு அனுப்பி வையுங்கள் அவர்கள் உடனடியாக AE கோபிநாத் மீதும் சம்பந்தப்பட்ட வீடுகளிண் மீதும் தகுந்த நடவடிக்கையை எடுப்பார்கள்