உச்ச நீதிமன்ற கொலீஜியம், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதரனை கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான அக்டோபர் 9 ஆம் தேதி தீர்மானத்தில் உறுதியாக உள்ளது என்று அறிவித்தது.
நீதிபதி முரளிதரன் தன்னை மணிப்பூரிலேயே பணி செய்ய அனுமதிக்குமாறு கொலீஜியத்திற்கு அக்டோபர் 10ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். நீதிபதி முரளிதரன் மணிப்பூரில் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் முகாந்திரமும் இல்லை என்று கொலீஜியம் பதிலளித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது..
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுலை மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க அரசுக்கு ஜூலை மாதம் நீதிமன்றம் பரிந்துரை செய்தது. ஆனால், அந்த பரிந்துரையை அரசு வாய் திறக்காமல் நிலுவையில் வைத்திருந்தது.
நீதிபதி மிருதுல் நியமனம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வுக்கு சமீபத்தில் அரசு தெரிவித்திருந்தது.
நீதிபதி முரளிதரன், பெரும்பான்மையான மெய்தீஸ்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது மணிப்பூரில் இன மோதல்களுக்கு வழிவகுத்த காரணங்களில் ஒன்றாகும்.

