மதுரை :திமுக நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 1500 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
பத்திர பதிவுத்துறை மற்றும் வணிக வரி துறை அமைச்சர்.பி.மூர்த்தி தலைமையில் இவ்விழா நடைபெற்றது.இவ்விழாவில் உடல்ஊனமுற்றோர் இளைஞருக்கு ரூ50,000 தொகையை 40 வதுவார்டு தி.மு.க.மாமன்ற உறுப்பினர் துரைப்பாண்டி தனது சொந்த நிதி யை வழங்கினார். அமைச்சர்.பி.மூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் வண்டியூர் பகுதி செயலாளர் பாண்டியராஜன், இளைஞர் அணி அமைப்பாளர் திருமலை ராஜன், வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளங்கோவன். மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், மகளிர் அணி மகேஸ்வரி மற்றும் ஜெ.ஜெ.நகர், பாரதிபுரம்,ஒத்தவீடு, மஸ்தான் பட்டி, கபீர் நகர், மாந்தோப்பு, சுந்தர் நகர்.உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

