Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நெடுங்குன்றம் ரவுடி சூர்யாவை அடுத்து, காவல்துறையின் சரித்திரப் பதிவேட்டில் இடம்பிடித்துள்ள படப்பை குணா பாஜகவின் OBC அணித்தலைவராக நியமனம்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 6, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
நெடுங்குன்றம் ரவுடி சூர்யாவை அடுத்து, காவல்துறையின் சரித்திரப் பதிவேட்டில் இடம்பிடித்துள்ள படப்பை குணா பாஜகவின் OBC அணித்தலைவராக நியமனம்.
56
SHARES
90
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: கொலை, கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு பாஜகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்துள்ள மதுரமங்கலத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா. இவரது உண்மையான பெயர் என்.குணசேகரன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது இருக்கிறது. குறிப்பாக 8 கொலை வழக்கு, 11 கொலை முயற்சி வழக்குகளும் இருக்கிறது.

படப்பை குணா: இந்த விவகாரம் தொடர்பாகக் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இவர் மீது போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இவை அனைத்தும் நிலுவையிலேயே இருக்கிறது. போலீசார் படப்பை குணாவை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், கடந்தாண்டு அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இருப்பினும், குணா கடந்தாண்டு நவம்பரில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இதற்கிடையே படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராக இருக்கிறார். அவர் பாஜகவில் மாவட்ட பொறுப்பிலும் இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே கட்சி பணிகளில் படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் தீவிரமாகச் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் படப்பை குணா செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

புதிய பதவி: இந்தச் சூழலில் தான் படப்பை குணா பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. மேலும், அவர் பாஜக சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகள், போராட்டங்களிலும் தொடர்ந்து கலந்து கொண்டே வந்தார். இந்தச் சூழலில், பாஜகவில் இணைந்த படப்பை குணாவுக்கு புதிய பதவி வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாஜகவில் இணைந்த அவருக்குக் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணித் தலைவர் பதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ். பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” மாநில தலைவர் கே அண்ணாமலை மற்றும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாநில செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோத் பி செல்வம் ஒப்புதலின்படி, காஞ்சிபுரம் மாவட்ட பார்வையாளர் பாஸ்கர் ஆலோசனை படியும், மாநில ஓபிசி அணி தலைவர் சாய் சுரேஷ் ஆலோசனை படியும் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக குணசேகரன் நியமிக்கப்படுகிறார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நியமனம்: அதன்படி பாஜகவின் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணித் தலைவராகப் படப்பை குணா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக 50+ வழக்குகளைக் கொண்ட பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா பாஜக மாநில பட்டியலின அணி மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

படப்பை குணா மீது..

8 கொலை வழக்கு,
11 கொலை முயற்சி வழக்கு ,
ஆள்கடத்தல் வழக்குகள் 29

அடிதடி,கட்டபஞ்சாயத்து, ஆக மொத்தம் 48 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 10 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில்
சிறை வாசம் அனுபவித்துள்ளார்.

Previous Post

உயர் நீதிமன்றம் உத்தரவைக்கூட அறிந்து கொள்ளாமல் ஆளுநர் அவதூறு பரப்புகிறார் : துரைமுருகன் வேதனை..

Next Post

தமிழகத்தில் முதல்முறையாக ‘ரியல் எஸ்டேட்’ மோசடி வழக்கில் 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழகத்தில் முதல்முறையாக ‘ரியல் எஸ்டேட்' மோசடி வழக்கில் 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

தமிழகத்தில் முதல்முறையாக ‘ரியல் எஸ்டேட்' மோசடி வழக்கில் 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In