கடலூர் : தமது வார்டில் தூய்மை இந்தியா உறுதி மொழி எடுத்துக்கொண்டு தூய்மை பணியாளர்கள் ,வார்டு மக்கள் குறிப்பாக வார்டு சிறுவர்களுடன் இணைந்து கடலூர் 1-ம் வார்டு விசிக கவுன்சிலர் செல்வா புஷ்பலதா சுத்தம் செய்தார். அப்போது தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்க எடுத்துசெல்லும் வாகனத்தை அவர் ஓட்டி மகிழ்ந்தார்.
செல்வா புஷ்பலதா தனது X சமூக வலைதளத்தில் கீழ்கண்டவாறு பதிவிட்டிருந்தார்…
சிறகுகள் வீசியே சுதந்திர ஆசையில் போகிறேன் நான் போகிறேன்……. என் வார்டில் நான் சுதந்திரமாக போகிறேன்….. தூய்மை பணியாளர்களோடும் வார்டு உறவுகளோடும்…. செல்லப் பிள்ளைகளோடும் சுதந்திரமாக இன்பமாய் இன்பமாய்……

