NDA கூட்டணியிலிருந்தும் பாஜகவின் ஆதரவிலிருந்தும் அதிமுக வெளிவந்த நிலையில், இது சிறிய கட்சிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது போல திமுக-விலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொழிலதிபர்கள் மூலம் மீண்டும் கூட்டணியில் இழுக்க பாஜக அதிமுக வை நெருக்கடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் அதிமுகவின் மூத்த நிர்வாகி முனுசாமி “இன்றைக்கும் இல்லை, என்றைக்கும் இல்லை, கூட்டணி முறிவு முறிவுதான், சமரச பேச்சக்கே இடமில்லை ” என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதையடுத்து திமுக கூட்டணியான விசிக, CPM ,CPI மற்றும் மதிமுகவுடன் அதிமுக ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக அரசல் புரசலாக பேசப்படுகிறது.
இந்த நிலையில் தான் திமுக தலைவர்கள், “இந்த கூட்டணி பிளவு நாடகம் என்றும், தேர்தல் முன்போ பின்போ மீண்டும் கூட்டணியில் சேர்ந்துவிடுவார்கள்” என்றும் மாறிமாறி செய்தியாளர்களிடம் கூறினர். ஆனால் ஸ்டாலினோ உளவுத்துறை மூலம் அதிமுகவில் அரசியல் காய்நகர்த்தல்களை கண்காணிக்க தொடங்கிவிட்டார் என்று தெரிய வருகிறது.
மேலும் தினமும் இரவு நேரங்களில் விசிக, CPM ,CPI மற்றும் மதிமுக கட்சியினர் அதிமுகவுடன் மறைமுகமாக தொடர்பு வைத்துக்கொள்கிறாரா?, என்ன பேசுகிறார்கள்? என்பதை பற்றி உளவுத்துறையிடம் விசாரிக்கிறாராம். ஆனால் உளவுத்துறையின் ரிப்போர்ட் மீது ஸ்டாலின் அவ்வளவு திருப்தியாக இல்லை, ரிப்போர்ட் உண்மையா பொய்யா என்று புலம்புகிறார் என்று அறிவாலய வட்டாரங்கள் சொல்வதையும் காண முடிகிறது.
கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான சீட் தரலாம் என்ற நிலையில் இருந்த திமுக, தற்போது கூடுதலாக சீட் தர தயாராகிவிட்டார்களாம். மூத்த அமைச்சர்கள் கட்சி நிகழ்ச்சிகளிலோ அரசு நிகழ்ச்சிகளிலோ தேவையில்லாததை பேசக்கூடாது, ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக பேச வேண்டும், பாராளுமன்ற தேர்தல் வரை அடக்கி வாசிக்கவேண்டும் என்றும் குறிப்பாக உதயநிதியை எதுவுமே பேசக்கூடாது என்றும் கட்டளையிட்டுள்ளாராம்.
இதனால் சீனியர் அமைச்சர்கள் ஏதாவது பேசிவிடுவோமா என்ற அச்சதுடனேயே ஒவ்வொரு கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்களாம். எது எப்படியோ முதவருடைய கவனம் முழுவதும் அதிமுகவின் அரசியல் மூவ்மென்ட்டை கவனிப்பதிலேயே உள்ளதாம்.

