டெல்லி : நமது நாடு சுதந்திர அடைவதற்கு முன்பும் பின்பும் பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். அரசிலமைப்பு சட்டமும் அதைதான் கூறுகிறது. ஆனால் ஒரேநாடு ஒரே தேர்தல் என்ற நீண்ட நாள் கோரிக்கையை மத்திய பாஜக அரசு கையிலெடுத்து வேகமாக நிறைவேற்ற முனைப்பு காட்டிவருவதை அறியமுடிகிறது.

இதுஒரு புறம் இருக்க, தற்போது மத்திய உயர்மட்ட குழு சட்டமன்ற பேரவையின் பதவிகாலத்தை 1 ஆண்டு குறைக்க ஆலோசித்து வருவதாக தகவல் பரவுகிறது.

அப்படியொரு சட்டம் இயற்றப்பட்டால் MP மற்றும் MLA ஆகிய பதவிகளுக்கும் பொருந்துமா? என்ற கேள்வி உள்ளது. அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடக்கும், அதுபோல் இந்தியாவிலும் ஒரு திட்டம் வகுக்கப்பட்டு ஆலூசிக்கப்படுவதாக தெரிகிறது.
திமுக : குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக அரசு பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் முடிந்த நிலையில் அவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சி தருவதாக அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.

2029க்குள் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அரசு சட்ட திட்ட ஆணையம் மூலம் உயர்மட்ட குழு நியமிக்கபட்டுள்ளதாக தெரியவருகிறது.

