தமிழக மின்சார வாரியத்திற்கு 400 கோடி இழப்பு ஏற்படுத்திய TANGEDCO அதிகாரி காசி வீட்டில் வருமான வரித்துறை சோதனை. நீங்கள் ஒவ்வொரு முறையும் அதிகமாக மின்கட்டணம் செலுத்த இந்த ஊழலும் முக்கிய காரணம். இவர் அமைச்சரின் உதவியாளர் அல்ல ஆனால் தினமும் முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் தான் வேலை செய்வார்.
இவர் மீது அறப்போர் கொடுத்த ஊழல் புகாரை இது வரை திமுக அரசு விசாரிக்கவில்லை. எதிர்க்கட்சி அதிமுக இது குறித்து இது வரை வாய் திறக்கவில்லை என்று அறப்போர் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ Twitter பக்கம் தெரிவித்துள்ளது.


வருமான வரித்துறையின் சோதனை வரவேற்க வேண்டியது இதே போன்று ஒரு பத்து பேர் அதாவது 10 அதிகாரிகளின் வீட்டில் சோதனை செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் மின் கட்டணம் தானாக குறைந்து விடும்