Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னை விமான நிலையத்தில் 13 கிலோ தங்கம், ஐபோன் உள்ளிட்டவை பறிமுதல்: கடத்தலில் ஈடுபட்டதாக 113 பயணிகள் மீது வழக்குப் பதிவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 16, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னை விமான நிலையத்தில் 13 கிலோ தங்கம், ஐபோன் உள்ளிட்டவை பறிமுதல்: கடத்தலில் ஈடுபட்டதாக 113 பயணிகள் மீது வழக்குப் பதிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.14 கோடி மதிப்புள்ள 13 கிலோதங்கம், 120 ஐபோன்கள், லேப்டாப்,வெளிநாட்டு சிகரெட், குங்குமப்பூஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்டதாக 113 பயணிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. இந்த விமானத்தில் பயணிகள் தங்கம், ஐபோன், லேப்டாப், வெளிநாட்டு சிகரெட் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததால், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். விமானத்தில் வந்த 186 பயணிகளையும் நிறுத்தி பல மணி நேரமாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடத்தலில் தொடர்பு இல்லாத 73 பேரை வெளியே செல்ல அனுமதித்தனர்.

பின்னர், 113 பயணிகளிடம் பிற்பகல் 3 மணி வரை விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, சுங்கத்துறை அலுவலகத்திலேயே அவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்தனர். அனைவரும் சாப்பிட்டுமுடிந்ததும் மீண்டும் விசாரணையை தொடங்கிய அதிகாரிகள், அவர்களை சோதனை செய்தனர்.

நள்ளிரவு வரை நடந்த சோதனையில் பயணிகள் உள்ளாடைகளுக்குள் தங்கப் பசைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிலர் சூட்கேஸ்லைனிங் உள்ளே தங்கத்தை ஸ்ப்ரிங் கம்பிகளாக மாற்றி மறைத்து வைத்திருந்தனர். சூட்கேஸ் மற்றும் பைகளில் ரகசியஅறைகள் வைத்து 120 ஐபோன்,84 ஆண்ட்ராய்டு போன், வெளிநாட்டு சிகரெட்கள், பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூக்கள், லேப்டாப்புகள் உள்ளிட்ட பொருட்களும் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

மொத்தம் ரூ.14 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கக்கட்டிகள், 3 கிலோ தங்க பசைகள் உட்பட அனைத்து பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 113பயணிகள் மீதும் சுங்க சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல்கடத்தல் பொருட்கள் கொண்டு வருபவர்களை மட்டுமே, சுங்கசட்டப்படி கைது செய்ய முடியும்.அதற்கு குறைவாக கடத்தல் பொருட்கள் இருந்தால், வழக்குகள் பதிவு செய்து, ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள். அதனால், 113பேரையும் அதிகாரிகள் ஜாமீனில் விடுவித்தனர். 113 பேரையும் ‘கடத்தல் குருவிகளாக’ பயன்படுத்திய கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் யார் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

Tags: ஈடபடடதகஉளளடடவஐபனகடததலலகலசனனதஙகமநலயததலபதவபயணகளபறமதலமதவமனவழககப
Previous Post

சனாதன தர்ம விமர்சனம் | ”பேச்சு சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்றது கிடையாது” – ஐகோர்ட் நீதிபதி என்.சேஷசாயி

Next Post

மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டோரின் குறை தீர்க்க உதவி மையங்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டோரின் குறை தீர்க்க உதவி மையங்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டோரின் குறை தீர்க்க உதவி மையங்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In