Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அண்ணாமலை, சவுக்கு சங்கரை டேக் செய்து வருத்தம் தெரிவித்த தினமலர்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 31, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
அண்ணாமலை, சவுக்கு சங்கரை டேக் செய்து வருத்தம் தெரிவித்த தினமலர்.
53
SHARES
86
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார். 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயில்கிற சுமார் 17 லட்சம் மாணவர்கள் இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.

இந்நிலையில் இன்று (ஆக.31) தினமலர் நாளிதழில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தரக்குறைவான தலைப்பிட்டு விமர்சிக்கப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து , தினமலர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது…

“திரு கி.ராமசுப்பு ஆசிரியராக கொண்ட தினமலர் சென்னை,கோவை ,மதுரை ,பாண்டிச்சேரி ,திருநெல்வேலி ,நாகர்கோவில் பதிப்புகளில் மேலே குறிப்பிட்ட செய்தி வெளிவரவில்லை. திரு R. சத்தியமூர்த்தி ஆசிரியராக கொண்ட தினமலர் ஈரோடு,சேலம் பதிப்புகளில் இந்த செய்தி வெளியாகி உள்ளது.

திரு R. சத்தியமூர்த்தி கடந்த 23 வருடங்களாக இந்த இரண்டு பதிப்புகளையும் தனியாக நடத்தி வருகிறார். இருப்பினும் “தினமலர்” பெயரில் இப்படி ஒரு அருவருக்கத்தக்க, வெட்கி தலை குனியக் கூடிய செய்தி வெளியாகி இருப்பது மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. தினமலர் ஈரோடு , சேலம் பதிப்புகளில் வெளியாகி உள்ள இந்த செய்தி ஏற்புடையதல்ல வன்மையாக கண்டிக்கிறோம். – கி.ராமசுப்பு,ஆசிரியர், தினமலர் “

என்று தினமலர் ஆசிரியர் கி.ராமசுப்பு, தினமலரின் இன்னொரு ஆசிரியரான R. சத்தியமூர்த்தி-யை கடிந்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த வருத்தம் தெரிவித்த ட்வீட்-இல் தினமலர் நிர்வாகம் , அண்ணாமலை, அமர் பிரசாத் ரெட்டி, சவுக்கு சங்கர் மற்றும் நடிகை கஸ்துரி ஆகியோரை டேக் செய்துள்ளனர்.

@SavukkuOfficial @annamalai_k @amarprasadreddy @KasthuriShankar

— Dinamalar (@dinamalarweb) August 31, 2023
Previous Post

ரூ.9 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் – இளைஞர் கைது

Next Post

கிருஷ்ணகிரி அருகே பூர்விக கிராமத்துக்குச் சென்ற ரஜினி – பெற்றோர் நினைவகத்தில் மரியாதை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கிருஷ்ணகிரி அருகே பூர்விக கிராமத்துக்குச் சென்ற ரஜினி - பெற்றோர் நினைவகத்தில் மரியாதை

கிருஷ்ணகிரி அருகே பூர்விக கிராமத்துக்குச் சென்ற ரஜினி - பெற்றோர் நினைவகத்தில் மரியாதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In