அண்மைகாலமாக பல சறுக்கல்களையும், சவால்களையும் தமிழக காங்கிரஸ் சந்தித்து வரும் நிலையில், புதிய தலைவர் மாற்றம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கே.எஸ்.அழகிரியையும் மாற்ற வேண்டும் என்று மூத்த தலைவர்கள் பலர் தொடர்ந்து, டெல்லி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதால் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஒரு வேளை முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் செயல்பட்டு வந்த ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் சட்டமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டால், தற்போதைய சட்டமன்ற குழு தலைவராக உள்ள செல்வ பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவரை தலைவராக நியமிக்க கூடாது என்றும், செல்வ பெருந்தகை அதற்கு தகுதியானவர் இல்லை என்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி துறை தலைவர் ரஞ்சன் குமார் உள்ளிட்ட பல்வேறு நபர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்…
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கூடிய விரைவில் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அல்லது ஓரிரு நாளில் அதற்கான அறிவிப்பை காங்கிரஸ் காரிய கமிட்டி வெளியீடும் என்றும் சொல்லப்படுகிறது….
செல்வ பெருந்தகை திமுக இடம் மிகவும் நெருக்கமாகவும் குறிப்பாக திமுகவின் தலைவர் ஸ்டாலினிடம் சில ரகசிய தகவல்களை கொடுப்பதாகவும் காங்கிரஸ் மாநில தலைவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற அவையில் சில விஷயங்கள் தனக்குத்தானே முடிவெடுத்து பேசி விடுவதாகவும் புகார் தலைமைக்கு சென்றுள்ளது..

