Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அதிர்ச்சி… சிறுநீர் ஊற்றுகிறார்கள்… திமுக மேயருக்கு எதிராக சிசிடிவி ஆதாரங்கள் வெளியீடு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 26, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அதிர்ச்சி... சிறுநீர் ஊற்றுகிறார்கள்... திமுக மேயருக்கு எதிராக சிசிடிவி ஆதாரங்கள் வெளியீடு!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக கோவை திமுக மேயர் கல்பனா, தங்களது வீட்டின் சமையலறை அருகே உள்ள காம்பவுண்ட் சுவர் மீது சிறுநீர், கெட்டுப்போனா குப்பைகளை கொட்டுவதாக மேயர் வீட்டிக்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் குடியிருப்புவாசி சிசிடிவி ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மணியகாரம்பாளையம் நட்சத்திரா கார்டன் பகுதியில் வசிப்பவர் சரண்யா. தஞ்சாவூரைப் பூர்விகமாக கொண்ட இவர், தனது கணவர் கோபிநாத் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் தம்பி குமார், அவரது தாயார் காளியம்மாளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக கோவை மாநகர மேயர் கல்பனாவும், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அவரது குடியிருப்பில் தங்காமல்,  தனது தம்பி குமாரின் இல்லத்தில் கணவருடன் வசித்து வருகிறார். மேயர் கல்பனா தங்கியிருக்கும் அந்தக் காம்பவுண்டில் நான்கு வீடுகள் இருக்கும் நிலையில், இரண்டு வீடுகளில் அவர்களது உறவினர்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக மேயர் கல்பனா இந்த இல்லத்தில் வசித்து வரும் நிலையில், அந்த காம்பவுண்டில் இருந்து சரண்யாவை காலி செய்ய வைக்க தொடர்ச்சியாக பல்வேறு தொல்லைகள் கொடுத்து வருவதாக மேயர் கல்பனா குடும்பத்தினர் மீது சரண்யா குற்றம் சாட்டுகிறார்.

’’கல்பனா மேயர் ஆவதற்கு முன்பு நன்றாக பழகியவர்கள், பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சினைக்குப் பின்னர் மோசமான அணுகு முறையில் ஈடுபட்டு வருகின்றனர். காம்பவுண்டில் இருக்கும் பொதுவான கேட்டை பூட்டு போட்டு வைத்துக் கொண்டு, காரைக் கூட வெளியில் எடுக்க முடியாத சூழலை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

சரண்யா வீட்டின் சமையலறையின் அருகே கெட்டுப் போன உணவு வகைகள், கோழி இறைச்சி போன்றவற்றை கொண்டு வந்து கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். வாளியில் சிறுநீரை பிடித்து அதையும் சமையலறையில் சுவற்றின் மீது ஊற்றுகின்றனர்

கல்பனா மேயரானவுடன் தினமும் குப்பை எடுக்க இந்த பகுதிக்கு வாகனங்கள் வருகின்றன. தூய்மைப் பணியாளர்கள் அவரது இல்லத்திலேயே வேலை செய்கின்றனர். அவர்கள் வீட்டில் இருந்து எதிர் வீட்டு மாடியில் ஏறி எங்கள் வீட்டு சமையலறை மீது சிறுநீரையும், கழிவுபொருட்களையும் ஏன் வீச வேண்டும்?

இரண்டு ஆண்டுகளாகவே இவர்களின் தொல்லைகள் அதிகமாகி வருகிறது. சமீபகாலமாக மேயர் கல்பனா இந்த வீட்டில் தங்க ஆரம்பித்தவுடன் தொல்லைகள் மேலும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் மனித உரிமை ஆணையத்திற்கு புகார்கள் அனுப்பி உள்ளோம்’’ என சரண்யா கூறியுள்ளார்.

.

Tags: அதரசசஆதரஙகளஊறறகறரகள..எதரகசசடவசறநரதமகமயரககவளயட
Previous Post

ரயில்களில் பாதுகாப்பு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை ரயில்வே துறை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

Next Post

மெட்ரோ.. நல்ல மெட்ரோ! – பாதுகாப்பான பயணம் என 97% பெண்கள் கருத்து

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மெட்ரோ.. நல்ல மெட்ரோ! - பாதுகாப்பான பயணம் என 97% பெண்கள் கருத்து

மெட்ரோ.. நல்ல மெட்ரோ! - பாதுகாப்பான பயணம் என 97% பெண்கள் கருத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In