நடிகை கிரண் யாரும் தன்னை நடிக்க அழைக்கவில்லை என வேதனை தெரிவித்து உள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்து வந்தவர் நடிகை கிரண். இவர் அஜீத், விக்ரம், கமல் ஹாசன் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து உள்ளார். கிரண் தனது கேரியர் பிரகாசமாக இருந்த நேரத்தில் திரையுலகில் இருந்து காணாமல் போனார்.
சமீபத்தில் கிரண் மீண்டும் சமூக வலைதளங்கள் மூலம் செய்திகளில் இடம் பிடித்துள்ளார். படங்களில் வாய்ப்புகள் இல்லாததால், அவரது வாழ்க்கையே பாழாகிவிட்டதாக தெரிவித்து உள்ளார். அத்துடன் யாரும் தன்னை நடிக்க அழைக்கவில்லை என வேதனை தெரிவித்து உள்ளார்.
அவர் கூறுகையில், “நான் தொடர்ந்து 5 சூப்பர்ஹிட் படங்கள் செய்த பிறகும், ஒருவர் கூட என்னை படங்களுக்கு அழைக்கவில்லை. படம் நடிக்க நான் தயாராக தான் இருக்கிறேன். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் படத் தயாரிப்பாளர்களிடம் தான் கேட்க வேண்டும். எனக்கு யாரும் வேலை கொடுக்கவில்லை, சென்னையை மிஸ் செய்கிறேன். புதிய இயக்குநர், புது கதை, புது கதாபாத்திரம் உள்ளிட்டவற்றில் நடிக்க தயராக இருக்கிறேன். ஆனால் நடிக்க தான் என்னை யாரும் அழைக்கவில்லை. நான் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன். அதே போன் நம்பர் தான் வைத்து இருக்கிறேன். கால் செய்து என்னை மீட் செய்யலாம். கதை சொல்லாம். வேலைக்கு மட்டும் போன் செய்யுங்கள். டின்னர் சாப்பிட போன் செய்ய வேண்டாம்” என்றார். நடிகை கிரண் ரத்தோட் குடும்பத்துடன் கோவாவில் வசித்து வருகிறார். அதற்கு பிறகு படங்களில் அவரை பார்க்க முடியவில்லை.


பாட்டி வேடம் எதுவும் இல்லை இருக்கும்போது கண்டிப்பாக கூப்பிடுவார்கள்