
திருப்பூர் மாவட்டம் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்து, தி.மு.க இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் மாநிலம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் ஒரு பகுதியாக, திருப்பூர் ரயில் நிலையம், அண்ணா – பெரியார் சிலை முன்பு திருப்பூர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் க.செல்வராஜ் MLA அவர்கள் தலைமையிலும்,திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் 4-ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன் மற்றும் மாநில மாணவர் அணி துணைசெயலாளர் திருமதி.வீரமணி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்று வருகின்ற மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தை,மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்..
நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பொதுமக்கள் – மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

