பனாஜி : கோவா தேவாலயத்தின் முன்புறம் அம்மன் சிலையை வைத்ததாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தெற்கு கோவாவில் உள்ள சான்கோலேயில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது, ஒரு வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிலையை வைத்தவர்கள், அம்மன் அருள் பெற வாருங்கள் என்று மக்களை வற்புறுத்துவது காணப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 10 பேர் மீது வெர்னா போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். “நாங்கள் 10 பேர் மீது குற்றம் பதிவு செய்துள்ளோம், மேலும் இந்த விஷயத்தை விசாரிக்க அவர்களை காவல் நிலையத்திற்கு வரவழைக்க முறைப்படி செய்துள்ளோம்” என்று போலீசார் தெரிவித்தனர். போலீஸ் இடைப்பட்டதால் கோவா வில் மடக்கலவறம் தடுக்கப்பட்டது என்று அங்கிருந்தவர்கள் கூறினர். இது போன்ற மத பிரச்சனைகள் தற்போது கோவா வில் வேண்டுமென்றே பரவலாக நடத்தப்படுகின்றது என்றும் கூறினர்.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்து அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

