பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் சீனர் என அழைக்கப்பட்டு, இனவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் அவர் வடகிழக்கைச் சேர்ந்த இந்தியக் குடிமகன் என்றும், சீனக் குடிமகன் அல்ல என்றும் குற்றவாளிகளுக்கு விளக்க முயன்றபோது, தாக்குதல் நடத்தியவர்கள் அவரைத் தாக்கினர்.
தகவலின்படி, பெங்களூரில் பைக்கில் வந்த மூன்று ஆசாமிகள் அந்த நபரைத் கொடூரமாகத் தாக்கினர், இதனால் அந்த நபர் சாலையில் சரிந்தார். பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் சிக்கிம் மாநிலம் ரின்சென்போங் நகரைச் சேர்ந்த தினேஷ் சுப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளார். நள்ளிரவு 3 மணியளவில் பைக்கில் வந்த மர்மநபர்களால் பாதிக்கப்பட்ட நபர் தாக்கப்பட்டார். தினேஷ் சுப்பா தனது நண்பர்களுடன் ஒரு விருந்தில் கலந்து கொண்டு தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, சுமார் மூன்று ஆசாமிகள் அவரை சீனர்கள் என்று கூறி துன்புறுத்தத் தொடங்கினர். மேலும் அவரது தலையில் கையால் அடித்தனர். சுப்பா தாக்கியவர்களைக் கூச்சலிட்டார் மற்றும் அவரை சீனர் என்று அழைப்பதை நிறுத்திவிட்டு வெளியேறும்படி கூறினார்.அந்த நேரத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் வெளியேறினர்,
ஆனால் சிறிது நேரம் கழித்து யாரோ ஒருவர் சுப்பாவை பின்னால் இருந்து தாக்கினார், பின்னர் அவர் தரையில் விழுந்தார். அதன்பிறகு, ஆசாமிகள் அவரை கட்டை மற்றும் கம்பியால் சரமாரியாக தாக்கினர். மேலும் தன்னை தாக்கியவர்கள் தான் தன்னை சீனன் என்று கூறி துன்புறுத்துவதாகவும் சுபா கூறியுள்ளார். ஒரு பல்பொருள் அங்காடி முன் மயங்கி விழுந்துவிட்டதாக சுபா கூறினார். சுயநினைவு பெற்றபோது அவர் சட்டையின்றி ரத்தம் கசிவதைக் கண்டார். மேலும், தன்னிடம் ஒரு பை இருந்ததாகவும், அதுவும் அந்த இடத்தில் இருந்து காணவில்லை என்றும் கூறினார்.

