இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சாத்தான்குளம் தேர்வுநிலை பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜோ.ஸ்டெல்லா ஜோசப் MA.,MSc.,B Ed., M Phil அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார்.
விழாவிற்கு மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஆ.செ.ஜோசப் (திமுக ஒன்றிய செயலாளர்) அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாரியம்மாள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சுந்தர்,ஞான ஜோதி கிறிஸ்துமஸ், ஜோசப்அலெக்ஸ், ஜான்சிராணி, இந்திரா,மகாராஜன், தேவநேசம் மற்றும் அழகம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் லெ.சரவணன், அறங்காவலர் குழு உறுப்பினர் எம்.ஜீ.மணிகண்டன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


