கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட பல நூலகங்களுக்கு போலி புத்தகங்களை வழங்கி முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், கல்வி அலுவலர் கொடுத்த புத்தகத்தை அவர் வாங்க மறுத்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம் பேட்டி
இதனைத்தொடர்ந்து, கட்டிக்குளத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
“கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கலெக்டர் புகார் கொடுத்துள்ளார். இதற்கு தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை.
தமிழகத்தில் தான் அதிக கோயில்கள் உள்ளன. ஒரு நாளைக்கு அதிக தேங்காய் உடைக்கிற மாநிலம் தமிழகம் தான். திருப்பரங்குன்றத்தில் புதிதாக ஒரு இடத்தில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று அரசியல் சாயம் பூசாமல் இருப்பது நல்லது.
த.வெ.க.விற்கு காங்கிரஸ் ஆதரவு தொடரும். இந்த 5 ஆண்டுகளும் எந்த மாற்றமும் வராது.” என்றார்.
