Tuesday, November 24, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அருள் விக்னேஷ் மீது FIR: “அரசு வழக்கறிஞரே, யாரையும் பாதுகாக்க முயற்சிக்காதீர்கள்" – உயர் நீதிமன்றம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 24, 2026
in அரசியல் செய்திகள்
0
அருள் விக்னேஷ் மீது FIR: “அரசு வழக்கறிஞரே, யாரையும் பாதுகாக்க முயற்சிக்காதீர்கள்" – உயர் நீதிமன்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், “ கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தவெக – எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தித்தாள்கள், செய்தித் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் முறைப்படி புகாரளிக்க வேண்டுமென காத்திருக்காமல் பொதுவெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஆரம்பத்திலிருந்தே இந்தக் குற்றச்சாட்டை வெறும் வதந்தி என்றே குறிப்பிட்டு வந்த தவெக அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும், `இது தொடர்பாக எங்களுக்கு ஆட்சியர் தரப்பிலிருந்து எந்தப் புகாரும் வரவில்லை’ என ஊடகங்களில் பேசிவந்தனர். அதே பதிலை நேற்று கூட நீதிமன்றத்திலும் உறுதிப்படுத்தியது தவெக அரசு. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் (SP) முறையான புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் மாவட்ட கலெக்டரின் கருத்துகளைக் கேட்டு நாளைக்குள் விளக்கம் அளிக்கும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணை நாளை நடைபெறும் எனக் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் ஆஜராகி, பாதிக்கப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரியுடன் தான் நடத்திய கலந்துரையாடல் குறித்த எழுத்துப்பூர்வமான குறிப்பை நீதிபதியிடம் சமர்ப்பித்தார். மேலும், அதிகாரியின் புகாரின் பேரில் தற்போது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அருள் விக்னேஷ்

அரசுத் தரப்பு ஆவணங்களைப் பரிசீலித்த நீதிபதி, “பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துவது அவரை அவமானப்படுத்துவதற்குச் சமம். காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாத்திருப்பார்கள் என நம்புகிறேன். ஊடகங்களும் பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடக் கூடாது. பாதிக்கப்பட்டவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஆபாசப் பதிவுகள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டன?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், “காவல்துறையினர் அவற்றை நீக்க நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே, சில நொடிகளில் அவை பரவி பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன” என்றார். இதைக்கேட்ட நீதிபதி, ”சைபர் கிரைம் பிரிவு உடனடியாகச் செயல்பட்டு, பெண் அதிகாரிக்கு எதிரான அனைத்து ஆட்சேபனைக்குரிய பதிவுகளையும் நீக்கும் என நம்புகிறேன். புகார் கிடைத்தவுடன் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் மிகத் துரிதமாகச் செயல்பட்டு FIR பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்

இருப்பினும், அத்துமீறல்கள் முன்னரே தடுக்கப்பட்டிருந்தால், அந்த அதிகாரி நேற்று புகார் அளிக்க வேண்டிய சூழலே ஏற்பட்டிருக்காது. அரசு வழக்கறிஞரே, யாரையும் பாதுகாக்க முயற்சிக்காதீர்கள். யாரையாவது பாதுகாக்க முயற்சிப்பதாக எனக்குச் சிறிய அறிகுறி தெரிந்தால்கூட…” எனக் கடுமையாக எச்சரித்தார். மேலும், “இந்தக் குற்ற வழக்கை உயர் மட்ட ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் மேற்பார்வையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். புகார் அளிக்கப்பட்டுள்ள நபர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதால், இந்தப் புகாரை விசாரிக்க மாநில அளவிலான ICC குழு அமைக்கப்பட வேண்டும்.

அதில் ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமின்றி, வெளிநபர்களும் இடம்பெற வேண்டும். இந்தக் குற்ற வழக்கை விசாரிக்கும் காவல்துறைக் குழு மற்றும் எம்எல்ஏ மீதான புகாரை விசாரிக்கும் ICC குழு ஆகியவை அமைக்கப்பட்டவை குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்வதற்காக, வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ( 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்.” என்றார்.

ஆபாச மெசேஜ்: “மைனாரிட்டி அரசைக் காப்பாற்ற… ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால்.!” – ஸ்டாலின் காட்டம்



.

Previous Post

ஆபாச மெசேஜ் விவகாரம்: “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன்” – எம்.பி கனிமொழி| Obscene message issue: “I wholeheartedly commend the Kallakurichi District Collector” – MP Kanimozhi

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In