Last Updated:
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் போதைப்பொருள் மற்றும் தங்கம் கடத்தல் உள்ளிட்ட ஐந்து கடத்தல் சம்பவங்களை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை முறியடித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் போதைப் பொருள் கடத்தல், தங்கம் கடத்தல் உட்பட 5 கடத்தல் சம்பவங்களை முறியடித்துள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான சோதனையை மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை கடந்த ஒரு மாதத்தில் தீவிரப்படுத்தியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் போதைப்பொருட்கள், செம்மரங்கள் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து திருச்சி வழியாகச் சென்னைக்கு காரில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே காரை மறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில், ஒன்றே முக்கால் கிலோ கடத்தல் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இலங்கையிலிருந்து கடல் வழியாக தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாகத் தொண்டியைச் சேர்ந்த சையது நபி கான் என்பவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

