Monday, November 23, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Whatsapp Alert | ‘வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை..’ மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 23, 2026
in அரசியல் செய்திகள்
0
Whatsapp Alert | ‘வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை..’ மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 23, 2026 4:13 PM IST

வாட்ஸ்அப் வெப் மூலம் கணக்குகள் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால் அலுவலகப் பணிகளுக்கு அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சகம்

முக்கியமான அலுவலகப் பணிகளுக்கு வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவதைத் தவிர்க்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் அரசு சார்ந்த தகவல்கள், நிறுவன ரகசியங்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்களை வாட்ஸ்அப் வெப் மூலம் பகிர்வதைத் தவிர்க்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வாட்ஸ்அப் வெப்-ஐ பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி?:

இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) கீழ் செயல்படும் தேசிய சைபர் அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு (NCTAU), வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) மூலம் பயனர்களின் கணக்குகள் சில சூழ்நிலைகளில் அங்கீகரிக்கப்படாத நபர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கண்டறிந்துள்ளது. வாட்ஸ்அப் வெப் கணக்கில் ஏற்கெனவே உள்நுழைந்துள்ள அமர்வை (Authenticated Session) பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் பயனர்களின் கணக்குகளுக்குள் அத்துமீறி நுழைய முடியும்.

இதன் மூலம், பயனர்களின் தனிப்பட்ட குறுஞ்செய்திகளைப் படிக்க முடியும். பயனர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து மற்றவர்களுக்குச் செய்திகள் அனுப்ப முடியும். தொடர்பு எண்கள் மற்றும் குழு உரையாடல்களை அணுக முடியும். கணக்கு உரிமையாளரின் அடையாளத்தைப் பயன்படுத்தி மோசடி, போலி இணைப்புகள் மூலம் தகவல் திருட்டு (Phishing) மற்றும் சமூகப் பொறியியல் மோசடிகளில் ஈடுபட முடியும். எனவே, அலுவலகக் கணினிகள், பலர் பயன்படுத்தும் கணினிகள் மற்றும் பொது இடங்களில் உள்ள கணினிகளில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும்போது பயனர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?:

  • முக்கியமான அலுவலகப் பணிகளுக்கு வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அரசு சார்ந்த தகவல்கள், நிறுவன ரகசியங்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் பிற முக்கியமான தகவல்களை கணினிகளில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் வெப் மூலம் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • வாட்ஸ்அப் வெப் கணக்கை நிரந்தரமாக லாக்-இன் நிலையில் வைத்திருக்க வேண்டாம். குறிப்பாக அலுவலகக் கணினிகள் மற்றும் பலர் பயன்படுத்தும் கணினிகளில், தேவைப்படாத நேரங்களில் வாட்ஸ்அப் வெப் கணக்கைத் தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்கக் கூடாது.
  • ஒவ்வொரு முறையும் பயன்படுத்திய பிறகு லாக்-அவுட் செய்ய வேண்டும். வாட்ஸ்அப் வெப் பயன்பாட்டை முடித்தவுடன் கட்டாயம் கணக்கிலிருந்து வெளியேற வேண்டும். பிரவுசர் விண்டோ அல்லது டேப்பை மூடுவது மட்டுமே லாக்-அவுட் செய்வதற்குச் சமமாகாது.
  • இன்காக்னிடோ அல்லது பிரைவேட் பிரவுசிங் முறையைப் பயன்படுத்தவும். வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத சூழலில், நம்பகமான கணினியில் இன்காக்னிடோ (Incognito) அல்லது பிரைவேட் பிரவுசிங் (Private Browsing) முறையைப் பயன்படுத்த வேண்டும். பிரவுசரை மூடுவதற்கு முன்பு கட்டாயம் லாக்-அவுட் செய்ய வேண்டும்.
  • பொது மற்றும் அறிமுகமில்லாத கணினிகளைப் பயன்படுத்த வேண்டாம். சைபர் கஃபேக்கள், பொது கணினி மையங்கள், ஹோட்டல்கள், பிறருக்குச் சொந்தமான கணினிகள் மற்றும் நம்பகத்தன்மையற்ற சாதனங்களில் வாட்ஸ்அப் வெப் கணக்கில் உள்நுழைவதைத் தவிர்க்க வேண்டும்.
  • கணக்கில் ஏற்படும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளைக் கவனிக்கவும். உங்கள் கணக்கிலிருந்து நீங்கள் அனுப்பாத செய்திகள் அனுப்பப்படுவது, தொடர்பில் இருப்பவர்கள் வழக்கத்திற்கு மாறாகப் பதிலளிப்பது அல்லது கணக்கில் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் தென்படுவது போன்றவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது.
  • உங்கள் சாதனத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும். கணினியின் இயங்குதளம் (Operating System), பிரவுசர் மற்றும் பாதுகாப்பு மென்பொருட்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய பதிவிறக்கங்கள், தெரியாத கோப்புகள், சட்டவிரோத மென்பொருட்கள் மற்றும் நம்பகத்தன்மையற்ற செயலிகளைத் தவிர்க்க வேண்டும்.

முக்கிய அறிவுறுத்தல்:

அரசு மற்றும் முக்கியமான அலுவலகப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் கணினிகளில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழலில் இன்காக்னிடோ அல்லது பிரைவேட் பிரவுசிங் முறையைப் பயன்படுத்தலாம். இருப்பினும், இது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமே. விழிப்புடன் இருங்கள்!. ஒவ்வொரு முறையும் பயன்படுத்திய பிறகு லாக்-அவுட் செய்யுங்கள்!. உங்கள் டிஜிட்டல் அடையாளத்தைப் பாதுகாத்திடுங்கள்!. என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.



.

Previous Post

அமைச்சர் ராஜ்மோகன் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி ஆளுநர், தலைமைச் செயலாளருக்கு பரந்தாமன் கடிதம்! |paranthaman-writes-to-tn-governor-seeking-sanction-to-prosecute-minister-rajmohan

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In