Saturday, November 21, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்… இருதலைக்கொள்ளி நிலையில் முதல்வர் விஜய்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 21, 2026
in அரசியல் செய்திகள்
0
`அரசியல் கட்சி நிறுவனமாகும் சூழல் உருவாகும்’ – டெண்டர் விவகாரத்தில் ஏன் வெளிப்படை அவசியம்?| அலசல்| ‘may arise for the formation of a political party’ – Why is transparency essential in tender matters?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இருதலைக்கொள்ளியாய் தவிக்கும் விஜய்…

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய இடைக்கால உத்தரவு, தமிழக அரசின் அரசியல் கணக்குகளை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.

அதாவது, இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதால், அந்த உத்தரவைச் செயல்படுத்துவது தொடர்பாக த.வெ.க தலைமையிலான தமிழக அரசுக்கு முக்கியமான பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தாமல் அரசு வேறு நிலைப்பாட்டை எடுத்தால், சட்டரீதியான கேள்விகளையும் நீதிமன்றத்தின் அதிருப்தியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாமல், இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.

மறுபுறம், நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால், அதற்கு எதிராகக் குரல் எழுப்பும் சிறுபான்மை அமைப்புகள் மற்றும் மக்களின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அரசியல் கணக்கும் ஆளுங்கட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆக, ஒரு பக்கம் நீதிமன்ற உத்தரவு, இன்னொரு பக்கம் வாக்கு வங்கி அரசியல் என இரண்டு அழுத்தங்களுக்கு இடையில் தமிழக அரசு சிக்கித் தவிக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு ஒருமுறை மட்டுமே தீபம் ஏற்ற அனுமதித்திருப்பதுதான். இதை நிரந்தர உரிமையாகவோ, எதிர்கால ஆண்டுகளுக்கான முன்னுதாரணமாகவோ எடுத்துக்கொள்ள முடியாது என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. எனவே, இந்த உத்தரவைச் செயல்படுத்துவதன் மூலம் விவகாரம் முடிவுக்கு வந்துவிடும் என்றும் சொல்ல முடியாது.

முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறாரா முதல்வர்?

இவ்விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், ”திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தைப் பொறுத்தவரை, தி.மு.க அரசுக்கு இருந்த அதே அரசியல் சிக்கல் இப்போது த.வெ.க அரசுக்கும் ஏற்பட்டிருக்கிறது. சிறுபான்மை மக்களின் ஆதரவை இழக்கக்கூடாது என்ற அரசியல் கணக்கு ஒருபுறம் இருக்கிறது. அதேநேரத்தில், நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்ற விமர்சனத்துக்கும் ஆளாகக்கூடாது. இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க முடியாது.

இந்தச் சூழலில், எந்த முடிவை எடுத்தாலும் அரசியல் ரீதியாக ஏதோ ஒரு தரப்பின் அதிருப்தியைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, முதல்வர் விஜய்க்கு இது சாதாரண நிர்வாகப் பிரச்னை மட்டுமல்ல… அரசியல் ரீதியாகவும் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய விவகாரம்” என்கிறார்கள்.

ஆக, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முந்தைய ஆட்சியின் நிலைப்பாட்டையே தொடர்வதா, அல்லது நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதா என்ற கேள்வி முதல்வர் விஜய்க்கு முன்னால் நிற்கிறது.

இந்த நிலையில், நவம்பர் 21-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நகல் மாலை நேரத்தில்தான் கிடைத்துள்ளது. இதன் மீது மேல்முறையீடு அல்லது சீராய்வு மனு தாக்கல் செய்வதா அல்லது தீர்ப்பைச் செயல்படுத்துவதா என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறோம்” என கூறியுள்ளார்.

எது எப்படியோ…. திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்படும் நாளில், மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தைவிட, அதைச் சுற்றி தமிழக அரசியலில் எழப்போகும் விவாதங்கள்தான் அதிக வெளிச்சம் பெறப்போகின்றன!



.

Previous Post

மருத்துவச் சேவைகளில் மொழித் தடையை நீக்க பாஷினி AI தொழில்நுட்பம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

காசி தமிழ் சங்கமம் 5.0: திருக்குறள் கருப்பொருளில் கோலப்போட்டி… மாணவர்கள் உற்சாகம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காசி தமிழ் சங்கமம் 5.0: திருக்குறள் கருப்பொருளில் கோலப்போட்டி… மாணவர்கள் உற்சாகம்! | India News (இந்தியா செய்திகள்)

காசி தமிழ் சங்கமம் 5.0: திருக்குறள் கருப்பொருளில் கோலப்போட்டி... மாணவர்கள் உற்சாகம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In