கடந்த செப்.9 ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக தவெக கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ் பாபு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
70 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார்.
இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ” அண்ணன் வி.எஸ் பாபு அன்பானவர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர்.
எங்கள் தலைவரின் நம்பிக்கையையும், அன்பையும் பெற்றவர். தவெகவின் கடினமான காலக்கட்டத்தில் எங்களுடன் சேர்ந்து பணியாற்றியவர். குறிப்பாக வட சென்னையின் முகமாக இருந்தவர். அவர் தவெகவில் இணையும்போது “சென்னையில் மக்கள் இன்னும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். குறிப்பாக வடசென்னையில் மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்’ என்று தலைவரிடம் சொன்னார்.
