Last Updated:
Rising Bharat Summit | நெட்வொர்க்18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷியுடன் ‘நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாடிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் தனது அரசு மாநிலத்தை முழுமையாக மாற்றிக் காட்டியுள்ளது என்றும், வளர்ச்சிப் பணிகள் மற்றும் நல்லாட்சியை முன்வைத்து பாஜக மீண்டும் மக்கள் ஆதரவைக் கோரும் என்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை தெரிவித்தார்.
நெட்வொர்க்18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷியுடன் ‘நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாடிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.து என்றும் குறிப்பிட்டார்.
வட இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிப்பதற்காக அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் வணிகம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, விளையாட்டுத் துறைப் பிரதிநிதிகளை ரைசிங் பாரத் உச்சிமாநாடு ஒன்றிணைக்கிறது. நவம்பர் 17, 18 தேதிகளில் நடைபெறும் இரண்டு நாள் ‘நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சிமாநாட்டில்’, நல்லாட்சி, அரசியல் தலைமை மற்றும் உத்தரப் பிரதேசத்தின் மாற்றம் குறித்த விவாதத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார்.
அவர் பேசுகையில், “தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தின் தோற்றத்தையே நாங்கள் மாற்றியுள்ளோம். கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் நாங்கள் செய்த பணிகளின் அடிப்படையில் மக்களைச் சந்திப்போம்” என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.
மாநிலத்தில் முன்பு ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் அரசுகளை விமர்சித்த அவர், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எத்தகைய விஷயங்களை முன்வைத்து வாக்கு சேகரிக்கும் என்பதையும் கேள்வி எழுப்பினார். சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் நிலவிய ‘காட்டாட்சி’ மற்றும் ‘ரவுடி ராஜ்ஜியம்’ குறித்தும், அப்போதைய ஊரடங்கு மற்றும் கலவரங்கள் குறித்தும் தங்களது கூட்டணி மக்களிடம் எடுத்துரைக்கும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பாஜகவின் ஆட்சி முறை குறித்துப் பேசிய யோகி ஆதித்யநாத், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும், ஆனால் ஒரு சில அரசியல் கட்சிகளில் மட்டுமே உண்மையான ஜனநாயகக் கட்டமைப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார். அதில், “எந்த அரசியல் கட்சிகளில் உண்மையான ஜனநாயகக் கட்டமைப்பு உள்ளது என்று பார்த்தால், அத்தகைய ஜனநாயக அமைப்பைக் கொண்ட ஒரே கட்சியாக பாஜக மட்டுமே இருப்பதை நீங்கள் காணலாம்” என்றார்.
மேலும், பாஜக ஆட்சியில் உத்தரப் பிரதேசத்தில் தற்போது காணப்படும் இத்தகைய நல்லாட்சி, இந்தியா கூட்டணி அல்லது சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் சாத்தியமாகியிருக்குமா என்றும் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பினார்.

