இட்டாவா நிலைய கண்காணிப்பாளர் பி.எம். மீனா, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) ஆய்வாளர் தினேஷ் குமார் சிங் மற்றும் அரசு ரயில்வே காவல்துறை (GRP) ஆய்வாளர் யதுவீர் சிங் ஆகியோர் அடங்கிய கூட்டுப் படையினர் 12 பேரையும் பத்திரமாக ரயிலிலிருந்து இறக்கிவிட்டனர். பின்னர், உரிய அனுமதி மற்றும் பயணச்சீட்டு இன்றி ரயிலில் ஏறி விதிகளை மீறியதற்காக ரயில்வே வர்த்தகப் பிரிவு அதிகாரிகள் நபர் ஒருவருக்கு தலா ரூ.3,000 வீதம் மொத்தம் ரூ.36,000 அபராதம் வசூலித்தனர்.

