Thursday, November 19, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2026-ல் அனிமேஷன் பிரிவு அறிமுகம் – மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2026
in அரசியல் செய்திகள்
0
57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2026-ல் அனிமேஷன் பிரிவு அறிமுகம் – மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 18, 2026 6:07 PM IST

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2026-ல் புதிய அனிமேஷன் பிரிவு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த சர்வதேச அனிமேஷன் திரைப்படங்கள் அறிமுகமாகிறது

News18
News18

திரைப்படத் துறையின் எல்லைகளை விரிவுபடுத்தும் வகையில், 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2026, அனிமேஷன் பிரிவை அறிமுகப்படுத்துகிறது.

இதுகுறித்து இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளிடியிட செய்திக் குறிப்பில்,”ஜப்பான், பிரான்ஸ், சீனா, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து சர்வதேச அனிமேஷன் திரைப்படங்களைக் கொண்டுள்ள இப்பிரிவு, கண்களைக் கவருவதோடு மட்டுமின்றி மனதைக் கவரும் படங்களை அறிமுகப்படுத்துகிறது.

ஜப்பானிய அனிமேஷன் படமான செர்ரி அண்ட் விர்ஜின் என்ற படத்தை மசனாடோ கவாஜிரி இயக்கியுள்ளார். 2026-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், பெண்களிடம் பேசுவதற்குத் திணறும் 32 வயது எரோடிக் மாங்கா கலைஞர் ரியோ மற்றும் நிஜ வாழ்க்கையில் ஆண்களுடன் பழகுவதில் அதே சிரமத்தை எதிர்கொள்ளும் 28 வயது அமி ஆகியோரைப் பற்றியதாகும். தங்களுடைய அச்சங்கள், காதல் அனுபவமின்மை இருந்தபோதிலும், இருவரும் சந்தித்து ஒருவரையொருவர் புரிந்துகொள்கிறார்கள். தங்கள் பாதுகாப்பின்மைக்கு அப்பால் உண்மையான பிணைப்பின் அமைதியான மகிழ்ச்சியைக் கண்டறிகிறார்கள்.

இப்படம், நகைச்சுவையுடனும் சொல்லப்பட்டுள்ளது. ஒசாக்கா கலைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான கவாஜிரி, தனது 2018 குறும்படமான ஏ ஜப்பானிஸ் பாய் ஹூ ட்ராஸ் மூலம் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார். இது ஜப்பானிலும் வெளிநாடுகளிலும் தொடர்ந்து பாராட்டுகளைப் பெறும் அழகியலை உருவாக்கியுள்ளது.

சமகால நகைச்சுவைக்கு ஏற்ப மனதை தொடும் பிரெஞ்சு இயங்குபடம் ஜிம் குயின். இதனை நிக்கோலஸ் அதானே, மார்க்கோ நிகுயேன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். பாரிஸில் அமைக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், நகரின் கே சமூகத்தினரிடையே போற்றப்படும் பிரபல உடல்தகுதி நிபுணரான ஜிம்மை மையமாகக் கொண்டுள்ளது. கே ஆண்களை நேராக மாற்றத் தொடங்கும் ஹெட்டிரோசிஸ் என்ற விசித்திரமான வைரஸ் காரணமாக அவருடைய வாழ்க்கை ஒரே இரவில் மாறிவிடுகிறது. இதனால் அவர் தனது பின்தொடர்பவர்கள், நண்பர்கள், சமூக அந்தஸ்தை இழக்க நேரிடுகிறது. குறைவாக அறியப்பட்ட போதிலும் நம்பிக்கையான இளையவரான லூசியன் மட்டுமே அவருடன் நிற்கிறார். ஒரு குணப்படுத்தும் மருந்தை வைத்துள்ளதாக வதந்தி பரப்பும் மருத்துவரைக் கண்டுபிடிக்க மாராய் நகரின் வீதிகள் வழியாக ஜிம் பயணிக்கிறார். இரு இயக்குநர்களும் புகழ்பெற்ற கோபிலின்ஸ் இயங்குபட பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

ட்ரம்ப், புதின், ஜின்பிங் சந்திப்பு: 3 வல்லரசு தலைவர்கள் ஒரே இடத்தில்! யாருக்கு என்ன எதிர்பார்ப்பு?

Next Post

அருண் ராம் விவகாரம்: “இது பாசிசமா பாயாசமா?” – முதல்வர் விஜயிடம் கேள்வி எழுப்பும் ஸ்டாலின்!| The Arun Ram affair: “Is this fascism or *payasam* (a sweet dessert)?” – Stalin poses a question to Cm Vijay!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விலைவாசி உயர்வு குறித்து ஸ்டாலின் விமர்சனம்: தாராபுரத்தில் என்ன நடந்தது?|“Can People Afford Groceries?” Stalin Flags Price Rise in Dharapuram

அருண் ராம் விவகாரம்: ``இது பாசிசமா பாயாசமா?" - முதல்வர் விஜயிடம் கேள்வி எழுப்பும் ஸ்டாலின்!| The Arun Ram affair: "Is this fascism or *payasam* (a sweet dessert)?" – Stalin poses a question to Cm Vijay!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In