Thursday, November 19, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ட்ரம்ப், புதின், ஜின்பிங் சந்திப்பு: 3 வல்லரசு தலைவர்கள் ஒரே இடத்தில்! யாருக்கு என்ன எதிர்பார்ப்பு?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2026
in அரசியல் செய்திகள்
0
ட்ரம்ப், புதின், ஜின்பிங் சந்திப்பு: 3 வல்லரசு தலைவர்கள் ஒரே இடத்தில்! யாருக்கு என்ன எதிர்பார்ப்பு?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்கா, ரஷ்யா, சீனா – இந்த மூன்று பவர்ஃபுல்லான உலக நாடுகளின் தலைவர்களும் நாளை ஓர் அறையில் கூடுகிறார்கள். இந்த மூன்று உலக நாடுகளின் தலைவர்களும் ஒரே நேரத்தில் ஓர் இடத்தில் சந்தித்துக்கொள்ளப் போவது இதுவே முதல் முறை.

சீனாவின் ஷென்சென் நகரில் இன்றும் (நவம்பர் 18), நாளையும் (நவம்பர் 19) ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாடு நடக்கிறது.

இதையொட்டி, சீனா செல்கிறார்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின்.

அங்கேதான் சீன அதிபர் ஜி ஜின்பிங், ட்ரம்ப், புதின் ஆகியோர் தனியாகச் சந்தித்துப் பேசவிருக்கின்றனர்.

Russia - Ukraine - புதின்
Russia – Ukraine – புதின்
“நிறுவனம் முடிவெடுத்தால் மீண்டும் CEO ஆவது எனக்கு கௌரவம்” – ஜென்சன்; Nvidia-வின் பதில் என்ன?

இந்த மூன்று நாடுகளின் தலைவர்கள் ஒன்றாகச் சந்திக்கின்றனர் என்பதே ஸ்பெஷலான விஷயம். இதில் ஈரான் போர், உக்ரைன் போர் நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் மூவரும் சந்திக்கிறார்கள் என்பது இன்னும் ஹைலைட்டான விஷயம்.

உக்ரைன் போர்: ரஷ்யாவே நேரில் தொடர்புபட்டிருக்கிறது. உக்ரைன் போரினால் ரஷ்யா மீது ஏகப்பட்ட தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இப்போதுதான் அமெரிக்காவில் ரஷ்யாவின் டீசல் இறக்குமதிகளுக்குத் தடைகளை விலக்கியுள்ளார் ட்ரம்ப்.

ஈரான் போர்: ரஷ்யா, சீனா இருவருமே ஈரானுக்கு ஆதரவாகத்தான் மறைமுகமாகச் செயல்படுகிறார்கள். இந்த முக்கோண சூழலில்தான் இந்தச் சந்திப்பு நடக்கிறது.

இந்தச் சந்திப்பில் எந்தத் தலைவருக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்கும் என்கிற கோணத்தைச் சற்று ஆராய்வோம்.

புதின்:

உக்ரைன் போன்ற சிறிய நாடுகளின் தலைவிதியை வல்லரசு நாடுகள் தீர்மானிக்கும் வகையிலான ஒரு சூழலை உருவாக்க புதின் விரும்புகிறார். இதற்கான பேச்சை நிச்சயம் இந்தச் சந்திப்பில் புதின் முன்னெடுப்பார்.

உக்ரைன் மீது மேலும் அழுத்தம் கொடுக்க ட்ரம்ப்பின் ஆதரவை புதின் நாடுவார். இதற்கு ஜி ஜின்பிங்கின் உதவியையும் புதின் எதிர்பார்க்கலாம்.

ஜி ஜின்பிங்:

ட்ரம்ப் மற்றும் புதினை ஒரே மேடையில் அழைத்து வருவதன் மூலம் சீனாவின் உலகளாவிய ராஜதந்திர செல்வாக்கை உலக நாடுகளுக்குக் காட்ட விரும்புகிறார் ஜி ஜின்பிங்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங்
Gold: ரூ.97,720-க்கு சறுக்கிய தங்கம் விலை; 2027-ம் ஆண்டு விலை என்னவாகும்? – நிபுணர் விளக்கம்

கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்காவிற்கு ஜி ஜின்பிங் சென்றிருந்தபோது, விமானப்படைத் தளத்திற்கு நேரில் சென்று ஜி ஜின்பிங்கை ட்ரம்ப் வரவேற்றார்.

சீனாவைத் தங்களுக்கு இணையான ஒரு உலக வல்லரசாக அமெரிக்கா அங்கீகரிப்பதன் அடையாளமாகவே சீனா இதைப் பார்த்தது. இதற்கு முன்பு எந்தவொரு அமெரிக்க அதிபரும் சீன அதிபரை இப்படி நேரில் சென்று வரவேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கு முன்னதாக இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது.

அந்த மாநாட்டில் கட்சியின் அடுத்தகட்டத் தலைமைக் குழு தேர்ந்தெடுக்கப்பட உள்ளதுடன், ஜி ஜின்பிங்கிற்கு வரலாற்றில் இல்லாத வகையில் நான்காவது முறையாகப் பதவி வழங்கவும் வாய்ப்புள்ளது.

எனவே, 2027-க்கு முன்னதாகத் தனது அரசியல் செல்வாக்கை வலுப்படுத்தவும், அரசியல் பலத்தைத் திரட்டவும் ஜின்பிங் விரும்புகிறார் என்று கூறப்படுகிறது.

இந்த ப்ளஸ்கள் இருந்தாலும், ட்ரம்ப், புதின், ஜின்பிங் சந்திப்பைக் கொஞ்சம் பயத்துடன் தான் அணுகுகிறது சீனா. காரணம், ட்ரம்ப், புதின் இருவருமே வழக்கமான ராஜதந்திர வரைமுறைகளைப் பின்பற்றாதவர்கள்.

எதிர்பார்க்காத ஏதோ ஒன்றைச் செய்து, இருவரும் சீன அதிபருக்கு அசௌகரிய சூழலைத் தந்துவிடுவார்களோ என்பதுதான் அந்த பயம்.

இதனால், இந்தச் சந்திப்பு எப்படி நடக்க வேண்டும்… என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்பதைப் பக்காவாகத் திட்டமிட்டு வருகிறார்களாம் சீன அதிகாரிகள்.

ட்ரம்ப்:

ட்ரம்ப் நிச்சயம் ஈரான், உக்ரைன் போர் குறித்துப் பேசுவார். ஏனெனில், ரஷ்யா, சீனா இரு நாடுகளுமே ஈரானின் நெருங்கிய கூட்டாளிகள்.

ஈரான் போர் தொடங்கியதில் சொந்த நாட்டிலேயே ட்ரம்ப் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
இஸ்ரேல் அதிபராக தொடர நெதன்யாகுவின் ஐடியா; ஒத்துழைக்காத எதிர்க்கட்சி! இன்னும் எத்தனை நாள் கெடு?

அது மட்டுமல்லாமல், ஈரானும் போர் முனையில் இன்னமும் அமெரிக்காவிற்கு டஃப் கொடுத்து வருகிறது. இது அமெரிக்கா எதிர்பார்க்காதது ஆகும். இதனால், ஈரான் போரின் அடுத்தக் கட்டம் குறித்து ஜின்பிங், புதினிடம் பேசுவார் ட்ரம்ப்.

அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் முன்மொழியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் போர் நிறுத்தத்தை அதிபரானதிலிருந்து ட்ரம்ப் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். ஜின்பிங் நினைத்தால் ரஷ்ய போர் நிறுத்தத்தைக் கொண்டுவரலாம் என்று முன்பே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

இதனால், உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ஜின்பிங் முன்னிலையில் நிச்சயம் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

இந்தக் கோணங்கள் அனைத்தும் எதிர்பார்ப்புகளே. இந்தச் சந்திப்பின் விளைவு என்னவாக இருக்கப் போகிறது என்பது நாளை தெரிந்துவிடும்!



.

Previous Post

‘’அயோத்தி, காசி, மதுரா எங்களுக்குத் தேர்தல் விவகாரங்கள் அல்ல; நம்பிக்கையின் மையங்கள்’’ : யோகி ஆதித்யநாத்

Next Post

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2026-ல் அனிமேஷன் பிரிவு அறிமுகம் – மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2026-ல் அனிமேஷன் பிரிவு அறிமுகம் – மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2026-ல் அனிமேஷன் பிரிவு அறிமுகம் - மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In