அரபுக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதைக் காடி ஐசன்காட் கூட்டணியில் இருக்கும் பிற தலைவர்களே விரும்பமாட்டார்கள். முக்கியமாக, அரபுக் கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், காடி ஐசன்காட் யூத மக்களுக்குக்கிடையே பின்னடைவைச் சந்திப்பார்.
இதனால், நெதன்யாகு, காடி ஐசன்காட் இருவருமே அரபுக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கத் தயாராக இல்லை. ஆனால், அரபுக் கட்சிகள் காடி ஐசன்காட்டிற்கு ஆதரவு தர விரும்புகிறார்கள். நெதன்யாகு ஆட்சியில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும்,
எங்களுக்கு ஆட்சியில் எல்லாம் பங்கு வேண்டாம்… எங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையைத் தடுத்தாலே போதும் என்றும் அரபுக் கட்சிகள் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டே இரண்டு ஆப்ஷன்கள்
இவர்கள் இருவருக்கும் இன்னும் இருக்கும் இரண்டு ஆப்ஷன்கள் – ஒன்று, மீண்டும் தேர்தல் நடத்துவது, இன்னொன்று, நெதன்யாகு மற்றும் காடி ஐசன்காட் இணைந்து தேசிய ஒற்றுமை அரசை அமைப்பது.
மீண்டும் தேர்தல் நடத்துவது இப்போதைக்கு முடியாதது. இஸ்ரேல் சட்டப்படி, தேர்தல் முடிவுகள் வெளியாகி 103 நாள்கள் ஆன பின்னும், பெரும்பான்மையைப் பெற முடியவில்லை என்றால் தான், மீண்டும் தேர்தல் நடத்த முடியும்.
இந்தத் தேதி 2027-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதிதான் வருகிறது.
நாடாளுமன்றத்தில் காடி ஐசன்காட்டிற்கு ஆதரவு அதிகமாக உள்ளதால், ஆட்சி அமைக்க அவரை அழைத்திருந்தார் இஸ்ரேலின் குடியரசுத் தலைவர் ஐசக் ஹெர்சாக்.
இதனால், காடி ஐசன்காட் டிசம்பர் 6-ம் தேதிக்குள், தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
