காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘belonging a journey of love’ நூல் கடந்த 10ஆம் தேதி இந்தியாவில் வெளியானது. இந்தப் புத்தகத்தில் சோனியா காந்தி, தான் தனது கணவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியைச் சந்தித்தது, இந்தியா வந்தது, முன்னாள் பிரதமரும், ராஜீவ் காந்தியின் தாயுமான இந்திரா காந்தியைச் சந்தித்தது, அவர்கள் இடையேயான உறவு, இந்திரா மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் படுகொலை உள்ளிட்டவற்றைப் பற்றி எழுதியுள்ளார்.

