Last Updated:
மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக இருப்பதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரி குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும் விவகாரம் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக சில தினங்களுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகா மாநிலம், மைசூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது, அவர் முன்னிலையிலேயே கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “மேகதாதுவில் நாங்கள் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது. உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் பரபரப்பானது. இதற்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், “அணை கட்ட முடியாது” என பதில் கொடுத்திருந்தார். இருந்தாலும், கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தொடர்ந்து அந்தக் கருத்தை பதிவு செய்துவருகிறார்.
இதற்கிடையில் நேற்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு வீழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரு மாநில முதலமைச்சர்களும் ஒரே இடத்தில் சந்திருந்த நிலையில், மேகதாது அணை தொடர்பாக கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரிடம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசினாரா எனும் கேள்வியையும் எதிர்க்கட்சிகள் எழுப்பிவந்தனர்.
இந்நிலையில், மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நவ.18ஆம் தேதி மாலை 4 மணிக்குச் சந்திக்க உள்ளனர்.
#WATCH | Bengaluru | On meeting Tamil Nadu CM Vijay at Sonia Gandhi’s book launch in Delhi yesterday, Karnataka CM DK Shivakumar says, “Of course, we are friends. They have their own political problems. I want to ask AIADMK, DMK and any other parties if they have seen the Supreme Court order. The SC order clearly states that we are bound to give them (Tamil Nadu) water, and we will do so. They went to court with a revision petition too. But what happened? What more opportunity do they have…”
— ANI (@ANI) November 17, 2026
இந்நிலையில் இன்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “மேகதாது விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அதிமுக, திமுக மற்றும் பிற கட்சிகள் பார்த்தனவா என்று நான் கேட்க விரும்புகிறேன்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று உச்ச நீதிமன்ற உத்தரவு தெளிவாகக் கூறுகிறது. நாங்கள் அதைச் செய்வோம். அவர்கள் மறுஆய்வு மனுவையும் தாக்கல் செய்திருந்தனர். ஆனால் என்ன நடந்தது? அவர்களுக்கு வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது?” எனத் தெரிவித்துள்ளார்.

