Tuesday, November 17, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மக்களவையில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதா: மத்திய அரசு தீவிரம் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 17, 2026
in அரசியல் செய்திகள்
0
இம்மாத இறுதியில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்? – மத்திய அரசின் திட்டம் என்ன? | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 17, 2026 7:55 AM IST

வரும் 20ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற கூட்டத் தொடர்
நாடாளுமன்ற கூட்டத் தொடர்

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் அதில், மக்களவையில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதை தொகுதி மறுசீரமைப்புடன் இணைக்கும் அரசியலமைப்புத் திருத்த மசோதா கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், முறையாக முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. இந்நிலையில், வரும் 20ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில், மக்களவையில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதை தொகுதி மறுசீரமைப்புடன் இணைக்கும் அரசியலமைப்புத் திருத்த மசோதா கொண்டுவரப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிடம் இதற்கான போதிய எண்ணிக்கையிலான உறுப்பினர்களின் ஆதரவு இல்லை.

ஒரு அரசியலமைப்புத் திருத்த மசோதா நிறைவேற, அவையில் வாக்களிக்கும் உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரு பங்கினரின் ஆதரவு தேவை.

அந்த வகையில், 361 பேரின் ஆதரவு தேவையாக உள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் 56 இடங்கள் குறைவாக உள்ளன.

இதனால் இவ்விவகாரத்தில் திமுகவின் 22 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற பாஜக கூட்டணி முயற்சிக்கக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி உறவை முறித்துள்ள திமுக, இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது என்கிற கேள்வியும் கவனம் பெற்றுள்ளது. அதேபோல, திரிணமுல் காங்கிரஸின் அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேரின் ஆதரவும் கிடைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.



.

Previous Post

விளையாடும்போது மாயமான மூன்று சிறுவர்கள் ஏரியில் சடலங்களாக மீட்பு! – கள்ளக்குறிச்சி அதிர்ச்சி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In