Tuesday, November 17, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“பிரதமரின் மௌனம் ஆச்சரியம்; தமிழ்நாட்டுக்கு நீதி வேண்டும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 17, 2026
in அரசியல் செய்திகள்
0
“டெல்லியில் எங்கும் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படவில்லை” – மாணிக்கம் தாகூர் எம்.பி. | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 16, 2026 3:43 PM IST

காவிரி – மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஆச்சரியம் அளிப்பதாகவும், தமிழ்நாட்டிற்கு நீதி வேண்டும் எனவும் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். 

மாணிக்கம் தாகூர் (கோப்புப் படம்)
மாணிக்கம் தாகூர் (கோப்புப் படம்)

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு தினங்களுக்கு முன்பாக கர்நாடகா மாநிலம் மைசூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன்னிலையில் பேசிய கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், மேகதாது அணையை யாராலும் தடுக்க முடியாது எனவும், பிரதமர் நரேந்திர மோடி தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் பேசியிருந்தார்.

பிரதமர் மோடி முன்னிலையிலேயே முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அவ்வாறு பேசியிருந்தது பெரும் பரபரப்பானது. இதற்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் அணையை கட்ட முடியாது எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.

அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது; “கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மைசூருவில் காவிரி-மேகதாது விவகாரத்தை எழுப்பியதைத் தொடர்ந்து, அது குறித்து நான் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஆச்சரியமளிக்கிறது.

#WATCH | Delhi | Congress MP Manickam Tagore says, “I have written to the PM on the Cauvery Mekedatu after the CM DK Shivakumar raised it in Mysuru. But the PM’s silence on the issue is surprising. Karnataka Chief Minister is not respecting the SC verdict on it.

This is not Karnataka vs. Tamil Nadu or Congress vs Congress. What we are saying is that we are ready to abide by what the Supreme Court says. But what DK Shivakumar is saying is that he will do what he wants despite SC decision. This is a matter of justice. We demand that Tamil Nadu get justice.”


— ANI (@ANI) November 16, 2026

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக முதலமைச்சர் மதிக்கவில்லை. இது கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான மோதல் அல்ல; அல்லது காங்கிரஸுக்குள் நடக்கும் விவகாரமும் அல்ல. உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறதோ, அதற்கு நாங்கள் கட்டுப்படத் தயாராக இருக்கிறோம். ஆனால், டி.கே. சிவகுமாரோ, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் தான் விரும்பியபடியே செய்வேன் என்று கூறுகிறார். இது நீதிக்கான விவகாரம். தமிழ்நாட்டிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.



.

Previous Post

‘ஒரு கம்யூனிஸ்ட்காரர் இப்படி ஆடம்பரமாக இருக்கிறார்.!’- சு.வெங்கடேசனை விமர்சித்த நீதிபதி சுவாமிநாதன் | justice G.R Swaminathan criticises s. venkatesan

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In