Last Updated:
டெல்லியில் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விமர்சனங்கள் மூலம் மக்கள் காட்டிய அன்பும் பாசமும் தன் மனதை தொட்டுவிட்டதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையான ‘belonging a journey of love’ நூல் வெளியிட்டு விழா இன்று மாலை டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உட்பட இந்தியா கூட்டணி கட்சியின் முதலமைச்சர்களும், காங்கிரஸ் முதலமைச்சர்களும், பல்வேறு தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
புத்தக வெளியிட்டு விழாவில் கருத்துகளை பரிமாறிக்கொண்ட சோனியா காந்தி எம்.பி, “சில விமர்சனங்கள் சற்று மோசமான தொனியில் இருக்கின்றன. ஆனால், சில மிகவும் நேர்மையானவை; அவை மக்கள் என்ன நினைக்கிறார்களோ, எதைச் சொல்ல வேண்டுமோ அல்லது எதைச் சொல்லக் கூடாதோ, அதை அப்படியே வெளிப்படையாகச் சொல்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
புத்தக வெளியீட்டில் சோனியா காந்தி எம்.பி. கூறியதாவது; “மக்களின் அன்பும் பாசமும் என்னைப் பெரிதும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளன. மக்கள் தங்கள் கருத்துகள் மூலமாகவும், புத்தகங்களை வாங்கியதன் மூலமாகவும், ஏன், விமர்சனங்கள் மூலமாகவும் காட்டிய அன்பும் பாசமும் என் மனதைத் தொட்டுவிட்டன. விமர்சனங்களும் அவசியமானவைதான்.
சில விமர்சனங்கள் சற்று மோசமான தொனியில் இருக்கின்றன. ஆனால், சில மிகவும் நேர்மையானவை; அவை மக்கள் என்ன நினைக்கிறார்களோ, எதைச் சொல்ல வேண்டுமோ அல்லது எதைச் சொல்லக் கூடாதோ, அதை அப்படியே வெளிப்படையாகச் சொல்கின்றன.
இதனை எழுதுவதற்கான காரணம், என் குடும்பம், என் மாமியார், என் கணவர், என் மகன், என் மகள் மற்றும் என்னைப் பற்றிப் பல விஷயங்கள் பேசப்படுகின்றன. ஆனால், சொல்லப்படுபவற்றில் பெரும்பாலானவை முற்றிலும் உண்மையற்றவை. அவை எங்கள் நிஜ வாழ்க்கையோடு எந்தத் தொடர்பும் கொண்டவை அல்ல.
அரசியலில் உள்ள என் சக ஊழியர்களும் நண்பர்களும் கூட இதே போன்ற அனுபவங்களைக் கொண்டிருக்கலாம். உங்களைச் சுற்றிப் பொய்க்கதைகள் பின்னப்படுகின்றன, உண்மையைச் துளியும் சாராத, மனதைப் புண்படுத்தும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. என் உணர்வுகளை வெளிப்படுத்தவும், என் குடும்பத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த உண்மைகளைப் பகிர்ந்துகொள்ளவும் இது ஒரு வழியாக இருக்கும் என்று கருதினேன். ஒருவேளை, மக்கள் என் தரப்பு கதையையும் கேட்டு அறிய முன்வரலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

