இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் கேப்டன் அமரிந்தர் சிங், “நாங்கள் இங்கு ஒரு சமூக நிகழ்விற்காக வந்துள்ளோம். இதில் அரசியல் விவகாரங்கள் எப்படி வர முடியும்? இது ஒரு சமூக நிகழ்வு. உதாரணமாக, எனது புத்தகங்களை நான் வெளியிட்டபோது, அவற்றில் மூன்று நிகழ்வுகளில் சோனியா கலந்துகொண்டார். பல நாடுகளில், அரசியல் சார்புகளைத் தாண்டி மக்கள் தொடர்ந்து சமூக ரீதியாக ஒருவருக்கொருவர் பழகுகிறார்கள்.

