Last Updated:
தனது இந்த இரண்டு நாள் பயணத்தின் போது பிலிப்பைன்ஸில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாடவும் திட்டமிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறவுள்ள 23-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 21-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அரசுமுறைப் பயணமாகப் புறப்பட்டுச் சென்றார்.
நாளை நடைபெறவுள்ள இந்த முக்கிய மாநாடுகளுக்கு முன்னதாகப் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் (ASEAN) உறுப்பு நாடுகளுடனான இந்தியாவின் உறவு, நமது ‘கிழக்கு நோக்கிச் செயல்படுவோம்’ (Act East Policy) கொள்கையின் இதயமாக விளங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
நூற்றாண்டு கால நாகரிகப் பரிமாற்றங்களில் வேரூன்றிய இந்திய-ஆசியான் உறவு, தற்போது வர்த்தகம், போக்குவரத்து இணைப்பு, கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் மக்களிடையேயான தொடர்பு ஆகிய முக்கியத் துறைகளில் ஒரு வலுவான பார்ட்னர்ஷிப்பாக வளர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து விவாதிப்பதற்கான மிக முக்கியத் தளமாக கிழக்கு ஆசிய உச்சி மாநாடு திகழ்கிறது என்றும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து மற்ற உலகத் தலைவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள ஆவலாக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆசியான் நாடுகளுடனான நெருக்கமான நட்புறவுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறியுள்ள பிரதமர் மோடி, தனது இந்த இரண்டு நாள் பயணத்தின் போது பிலிப்பைன்ஸில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாடவும் திட்டமிட்டுள்ளார்.
Will be in Manila, Philippines later today and tomorrow to attend the following programmes:
23rd ASEAN-India Summit.21st East Asia Summit
India attaches immense importance to close friendship with ASEAN nations.
I’m also looking forward to interacting with the Indian community based in the Philippines.
https://t.co/xmAZDNtrFw
— Narendra Modi (@narendramodi) November 16, 2026
பிராந்திய நாடுகளுடனான பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலாச்சார ஈடுபாட்டை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாநாடுகளில் பங்கேற்கும் பிரதமர், இந்தோ-பசிபிக் பிராந்தியத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பொதுவான சவால்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.

