Monday, November 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மேகதாது: ‘உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’- முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம் | stalin wrote letter to cm vijay regarding An all-party meeting Mekedatu Dam issue

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 16, 2026
in அரசியல் செய்திகள்
0
மேகதாது: ‘உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’- முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம் | stalin wrote letter to cm vijay regarding An all-party meeting Mekedatu Dam issue
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த நிலையில்தான், கர்நாடக முதலமைச்சர் திரு. டி.கே. சிவக்குமார் அவர்களே ஒரு செய்தியாளர் சந்திப்பில், “தமிழ்நாடு அரசு சார்பாகத்தான் பேச்சுவார்த்தைக்கு அணுகினார்கள். கர்நாடகம் அணுகவில்லை” என்பதைத் தெரிவித்தார். கடைசியில், கர்நாடகத்தில் உள்ள சில அமைப்புகள் தெரிவித்த எதிர்ப்புக்கு அடிபணிந்து, “தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகத்துக்கு வரவேண்டாம்” என்று கூறிவிட்டார். இந்த நிகழ்வுகள் எதுவுமே தமிழ்நாட்டு மக்களுக்கு உவப்பானதாக இல்லை.

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் பேசி வரும் நிலையில், நமது விவசாயிகளைக் காப்பதற்காகத் தமிழ்நாட்டின் கட்சிகளும் நமது ஒற்றுமையை வெளிப்படுத்துவது அவசியம் என்பதை நான் வலியுறுத்தி, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி நமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்பதையும் தெரிவித்திருந்தேன். மேகதாது அணை கட்டும் பிரிச்னையை நடுவர் மன்றத்துக்கு அனுப்ப வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றிய போது, பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வின் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் என்பதைச் சட்டமன்றத்திலேயே வலியுறுத்தி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் அளிப்போம் என்றும் தெரிவித்தார்.

டி.கே சிவகுமார்- விஜய்

டி.கே சிவகுமார்- விஜய்

கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணை கட்டுவது குறித்து மீண்டும் தீவிரமாகப் பேசத் தொடங்கி இருக்கும் சூழ்நிலையில், இனியும் தமிழ்நாடு அரசு மவுனம் காக்கக் கூடாது. எனவே, நமது ஒற்றுமையையும் கர்நாடக முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று இக்கடிதத்தின் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும், மேகதாது அணைக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜூன் மாதம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தையும், தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றக் கட்சித் தலைவர்களும் – அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மாண்புமிகு பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். காவிரி உரிமையைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் கட்சி வேறுபாடுகளையும் கடந்து நாம் ஒற்றுமையாக நிற்பது அவசியம்.

தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகள் மற்றும் வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.



.

Previous Post

மேகதாது விவகாரம்: “தமிழ்நாட்டின் நீருரிமைக்கே அச்சுறுத்தல்; தவெக அரசு மௌனம் காக்கிறது!" – TRB ராஜா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In