Last Updated:
பழங்குடியினர் கவுரவ தினத்தை ஒட்டி ரூ. 3,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
பழங்குடியினர் கவுரவ தினத்தையொட்டி, 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், பழங்குடியினத் தலைவருமான பிர்ஸா முண்டாவின் 151ஆவது பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. பிர்ஸா முண்டாவின் பிறந்த நாள், பழங்குடியினர் கவுரவ தினமாக கடந்த 2021-இல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிராவின் கட்சிரோலியில் நடைபெற்ற பழங்குடியினர் கவுரவ தினக் கொண்டாட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார்.
இதில், சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 246 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பழங்குடியினரின் கல்வி, சுகாதாரம், வாழ்வாதார வாய்ப்புகள், சமூக உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அந்தக் காலகட்டங்களில் நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அப்போதைய அரசாங்கத்தால் கைவிடப்பட்டனர் என்றும் அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாகவும் கூறினார். தற்போது, நக்சலிசம் ஒழிக்கப்பட்ட நிலையில், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தாய்மார்களும் சகோதரிகளும் தங்களை ஆசிர்வதிப்பதாகவும் தெரிவித்தார்.

