Last Updated:
உத்தராகண்ட்டில் மேடையில், பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மைக்கை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தராகண்ட்டில் மேடையில், பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மைக்கை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பித்தோராகர் மாவட்டத்தில் பாரம்பரிய ஜூல்ஜிபி (Jouljibi) திருவிழா நடைபெற்றது. தார்ச்சுலா தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹரிஸ் சிங் தாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பாஜக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டார்.
விழா முடிந்து முதலமைச்சர் அங்கிருந்து சென்ற பின்னர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர், தனது ஆதரவாளர்களுடன் மேடைக்குச் சென்று, மாநில அரசையும் முதலமைச்சரையும் கடுமையாகத் தாக்கி பேசினார்.
🚨 INSANE SCENES! Uttarakhand Congress MLA Harish Dhami goes on a VIOLENT RAMPAGE!
Hurls a mic at sound staff, abuses them, says “Bh*sd*”, throws a chair at the sound system and SMASHES BOTH podiums on stage!😳Is this Mohabbat Ki Dukan? Look at the conduct… https://t.co/k3fpfodp0k
— The Analyzer (News Updates🗞️) (@Indian_Analyzer) November 14, 2026
அப்போது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மைக்கை அணைத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒலிப்பெருக்கி ஊழியர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மைக்கை வீசியும், நாற்காலிகளை தூக்கி எறிந்தும் ஆவேசத்தை வெளிப்படுத்தினார்.
முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியை கோழை என விமர்சித்த அவர், தார்ச்சுலா தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிடத் தயாரா எனச் சவால் விடுத்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பாஜக, கடந்த 5 ஆண்டுகளாகத் தொகுதியில் எந்த வளர்ச்சிப் பணியையும் செய்யாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தோல்வி பயத்தில் பொதுமேடையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.

