Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வந்தே பாரத் Sleeper-ல் RAC இருக்கை ரத்து; அனைத்து ரயில்களிலும் RACக்கு முற்றுப்புள்ளி? | End of RAC (Reservation Against Cancellation) category in trains: RAC to be discontinued on Vande Bharat sleeper trains

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 14, 2026
in அரசியல் செய்திகள்
0
வந்தே பாரத் Sleeper-ல் RAC இருக்கை ரத்து; அனைத்து ரயில்களிலும் RACக்கு முற்றுப்புள்ளி? | End of RAC (Reservation Against Cancellation) category in trains: RAC to be discontinued on Vande Bharat sleeper trains
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நீண்ட தூர ரயில்களில், உறுதிப்படுத்தப்பட்ட சீட்கள் முடிந்த பிறகு டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஆர்.ஏ.சி எனப்படும் ஒரு டிக்கெட் வழங்கப்படும். அந்த டிக்கெட்டில் ஒரு படுக்கையை இரண்டு பேர் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் ஒரு படுக்கையை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பயணிக்கு ஒதுக்கி விடுவதுண்டு. இதுபோன்ற நேரங்களில் இரண்டு பயணிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாவதுண்டு. படுக்கைக்கு முழு பணத்தைக் கொடுத்துவிட்டு இரவு முழுவதும் இருக்கையில் உறங்க முடியாமல் அமர்ந்து கொண்டே பயணம் செய்ய வேண்டிய நிலை ஆர்.ஏ.சி பயணிகளுக்கு ஏற்படுகிறது. இது குறித்து பாராளுமன்ற பொது தணிக்கை கமிட்டியும் தனது அதிருப்தியைத் தெரிவித்து இருந்தது.

இதனால் பயணிகளிடையே சில நேரங்களில் சண்டை ஏற்படுகிறது. அந்தச் சண்டையைத் தீர்த்து வைக்க வேண்டிய நிலை டிக்கெட் பரிசோதகருக்கு ஏற்படுகிறது. ரயில்வேயில் டிக்கெட் புக்கிங் ஆன்லைன் இல்லாமல் மனிதர்கள் கையால் கையாளப்படும்போது நிர்வாக வசதிக்காக ஆர்.ஏ.சி முறை கொண்டு வரப்பட்டது.

கூடுதல் பயணிகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்தால் அந்த இருக்கையை வேறு ஒருவருக்குக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஆர்.ஏ.சி முறை அறிமுகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த முறை தொடர்ந்து அமலில் இருந்து வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே முதியோர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டு இருப்பதால் பயணிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதையடுத்து ஆர்.ஏ.சி டிக்கெட் முறையை அடியோடு ஒழித்துவிடுவது குறித்து ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போதுள்ள ஏற்பாடுகள் பயணிகளின் வசதிக்காக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதற்கு முதல் கட்டமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் ஆர்.ஏ.சி டிக்கெட் முறை ரத்து செய்யப்படுகிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் முழுக்க முழுக்க அனைத்து இருக்கைகளும் படுக்கை வசதி கொண்டதாக இருக்கும். ஆர்.ஏ.சி. இருக்கை இருக்காது.



.

Previous Post

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு: இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சரான இளம்பெண் உட்பட இருவர் கைது | Tanishq jewellery store robbery case: Two arrested, including Instagram influencer

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In