மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், சந்தேகத்திற்குரிய வகையில் காவல் நிலையத்திலேயே உயிரிழந்த விவகாரம் விவாதமாகியிருக்கிறது. இது தொடர்பாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், “தவெக ஆட்சியில் மேலும் ஒரு காவல் மரணம் – காவல் நிலையங்களே மரணக் கூடங்களாக மாறுகின்றனவா? அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களுக்கு யார் பொறுப்பு? மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், சந்தேகத்திற்குரிய வகையில் காவல் நிலையத்திலேயே உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் அடுத்தடுத்து அரங்கேறிய ஆறு-க்கும் மேற்பட்ட காவல் மரணங்களின் தொடர்ச்சியாகவே இச்சம்பவமும் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உயிரிழந்தவரின் உறவினர்கள், இம்மரணம் குறித்த உண்மை நிலையை விளக்கக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
