Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அமெரிக்காவில் ட்ரம்ப் பின்னடைவு: இந்த நேரத்தை பயன்படுத்தும் ஈரான்? போரில் ஈரான் நிலைப்பாடு என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 12, 2026
in அரசியல் செய்திகள்
0
ஹார்முஸ் மூடல்: கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு யார் காரணம்? ஈரான் பதில் | ‘Who Closed Hormuz?’ Iran Fires Back at the US
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நவம்பர் 3-ம் தேதிக்குப் பின், ஈரான் மீது தீவிரத் தாக்குதல் என்று அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அவர் அந்தத் தேதியைக் குறித்ததற்குக் காரணமே, அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி நடந்த இடைக்கால தேர்தல்.

அந்தத் தேர்தலின் வெற்றி ட்ரம்ப் கட்சியான குடியரசுக் கட்சிக்குச் சாதகமாக அமையவில்லை. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றதற்கான மிக முக்கிய காரணம் – ஈரான் போரை அமெரிக்க மக்கள் விரும்பாததுதான்.

இதனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ட்ரம்ப் ஈரான் போரில் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் முன்பிருந்தே பேச்சுவார்த்தை அல்லது தீவிரத் தாக்குதல் என்றுதான் ஈரான் போரில் நிலைப்பாடு வைத்திருந்தார்.

ஈரான்
ஈரான்
FIIs தொடர் முதலீடு: வரிக் குறைப்பிற்காக நிபுணர்கள் செய்த ‘லாபி’ – பிரவீன் சக்கரவர்த்தி குற்றச்சாட்டு

மாறிய ஈரானின் நிலைப்பாடு

இப்போது ஈரான் இந்த நிலைப்பாட்டைக் கையில் எடுத்துள்ளது. ஈரான் போர் தொடங்கியதிலிருந்து பேச்சுவார்த்தை குறித்து ஈரான் பெரிதாகப் பேசியதில்லை. ஆனால், இப்போது ஈரானின் முக்கியத் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை குறித்துப் பேசுகிறார்கள்.

ஆனால், பேச்சுவார்த்தைக்குச் செக்காக ஏழு நிபந்தனைகளையும் முன்வைக்கிறார்கள்.

ஈரான் போரினால் அமெரிக்காவிற்கு நிதிச் செலவு, ஆயுத இருப்புக் குறைப்பு ஆகியவை நடந்துள்ளதுதான். அதேபோல, ஏற்கெனவே பல தடைகளைத் தாங்கியுள்ள ஈரானால் இந்தப் போரைத் தொடர்ந்துகொண்டே இருக்க முடியாது.

அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கலாம்… இரண்டு ஆண்டுகளுக்கான உணவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கலாம். ஆனால், போர் நிறுத்தம் என்னும் ஆப்ஷன் இருக்கும்போது, அவர்கள் போரைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமான முடிவு அல்ல.

இதனால், ஈரான் இப்போது போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை குறித்துத் தொடர்ந்து பேசி வருகிறது. ஏனெனில், ட்ரம்பிற்குச் சொந்த நாட்டிலேயே நெருக்கடி இருக்கும் இந்த நேரத்தை ஈரான் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது போலும்.

ஆனால், போர் நிறுத்தத்தையும் அவ்வளவு எளிதாக அவர்கள் எட்டிவிட நினைக்கவில்லை. இந்தச் சமயத்தைப் பயன்படுத்தி அவர்களுக்குத் தேவையான விஷயங்களைச் சாதித்துக்கொள்ள நினைக்கிறார்கள். அதனால்தான், ஈரான் ஏழு நிபந்தனைகளை முன்வைக்கிறது.

மசூத் பெசெஷ்கியான்
மசூத் பெசெஷ்கியான்
கார் ஓட்டத் தெரியுமா? தமிழ்நாட்டில் Indian Post-ல் வேலைவாய்ப்பு; ரூ.63,000 வரை சம்பளம்; முழு விவரம்

ஈரான் போரில் தற்போது ஈரானின் நிலைப்பாடு என்ன என்பதை ஈரானின் முக்கியத் தலைவர்களின் பதிவுகள்…

ஈரான் நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் காலிபாஃப்: “ஈரானுடன் ஒரு முடிவில்லாத போருக்குள் அமெரிக்காவை இழுத்துவிட இஸ்ரேலியர்கள் தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

இப்போதைய அதிபரோ அல்லது எதிர்காலத்தில் வரப்போகும் அதிபரோ, அவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, யாராலும் தப்பிக்க முடியாத ஒரு படுகுழி அது.

வாஷிங்டன் தனது ‘இஸ்ரேலுக்கு முதலிடம்’ என்ற மனநிலையைக் கைவிடாவிட்டால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நேராக ஒரு இருண்ட காலத்தை நோக்கித்தான் செல்லும்”.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான்: “ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்கிறோம் என்று சொல்லிப் போரைத் தொடங்கினார்கள். பிறகு, லாமெர்ட் நகரில் முதன்முறையாக PrSM ஏவுகணையைப் பயன்படுத்தினார்கள்.

இப்போது, மிரட்டல்கள் மூலமாக ராஜதந்திரத்தை முன்னெடுக்க ‘அனைத்து வெடிகுண்டுகளின் தாய்’ பற்றிப் பேசுகிறார்கள். இது முரண்பாடு அல்ல, மாறாக ஒரு அவமானம். உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் உண்மையில் அச்சுறுத்தல் யார்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.



.

Previous Post

இந்தியாவில் வறுமை ஒழிந்துவிட்டதா? உலக வங்கி வெளியிட்ட அறிக்கை சொல்வது என்ன? | Poverty Reduction in India World bank release a Report 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In