Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“பாதுகாப்புப் படை வீரர்கள் மீது மற்றொரு தாக்குதல் துரதிர்ஷ்டவசமானது” – J&K துணை முதலமைச்சர் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 12, 2026
in அரசியல் செய்திகள்
0
“பாதுகாப்புப் படை வீரர்கள் மீது மற்றொரு தாக்குதல் துரதிர்ஷ்டவசமானது” – J&K துணை முதலமைச்சர் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 11, 2026 9:26 PM IST

ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று வீரர்கள் காயமடைந்தனர்.

News18
News18

ஜம்மு & காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) வீரர்கள் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஜம்மு & காஷ்மீரின் துணை முதலமைச்சர் சுரிந்தர் சௌத்ரி,  “ஜம்மு காஷ்மீருக்கு பல ஆண்டுகளாக பயங்கரவாதம் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது மாநில அந்தஸ்தும் சிறப்பு அந்தஸ்தும் பறிக்கப்பட்டதுதான் மிகப்பெரிய இழப்பு. ஜம்மு காஷ்மீர் மக்கள் அளவற்ற துன்பத்தை அனுபவித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு & காஷ்மீர், குல்காம் மாவட்டத்தின் மிர் பஜார் எனும் பகுதி அருகே சிஆர்பிஎஃப் வீரர்களின் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாம் அருகே சிஆர்பிஎஃப் வீரர்கள் இன்று பிற்பகல் சுமார் 2.15 மணிக்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென சிஆர்பிஎஃப் வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

தொடர்ந்து மிர் பஜார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு, தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான நிலையில், இன்று குல்காம் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி தலைவரும், துணை முதலமைச்சருமான சுரிந்தர் சௌத்ரி, “மற்றொரு தாக்குதல் நடந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இதில் நமது பாதுகாப்புப் படையினர் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைந்து, வீடு திரும்பி, தங்கள் பணிகளை மீண்டும் தொடங்குவார்கள் என்று நம்புகிறேன்.

#WATCH | Nowshera: J&K Deputy CM Surinder Choudhary says, “… unfortunate that another attack has taken place, in which some of our security personnel have been injured. I hope they recover quickly, return home and resume their duties… Terrorism has caused damage to Jammu and Kashmir over the years. Many young people and security personnel have lost their lives. The National Conference has also made great sacrifices, losing its leaders, ministers, MLAs and party workers… The biggest loss was the removal of our statehood and special status. The people of Jammu and Kashmir have suffered enormously, and it has still not ended…”


— ANI (@ANI) November 11, 2026

பல ஆண்டுகளாக பயங்கரவாதம் ஜம்மு காஷ்மீருக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல இளைஞர்களும் பாதுகாப்புப் படையினரும் தங்கள் உயிரை இழந்துள்ளனர். தேசிய மாநாட்டுக் கட்சியும் அதன் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களை இழந்து பெரும் தியாகங்களைச் செய்துள்ளது. நமது மாநில அந்தஸ்தும் சிறப்பு அந்தஸ்தும் பறிக்கப்பட்டதுதான் மிகப்பெரிய இழப்பு. ஜம்மு காஷ்மீர் மக்கள் அளவற்ற துன்பத்தை அனுபவித்துள்ளனர், அது இன்னும் முடிவடையவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.



.

Previous Post

TVK MLA-க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? – விரிவான பின்னணி! | Political Lab

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In