ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் – அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு.
நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை.
குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம்.

தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர்.
மிரட்டல் – அடிதடி – கட்டப்பஞ்சாயத்து – கமிஷன் – பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.
இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விமர்சித்திருக்கிறார்.
