Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“பஸ்தரில் பிரதமர் தீபாவளி கொண்டாட்டம்; ராணுவ வீரர்களின் மன உறுதி பலப்படும்” – விஷ்ணு தேவ் சாய் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 8, 2026
in அரசியல் செய்திகள்
0
“பஸ்தரில் பிரதமர் தீபாவளி கொண்டாட்டம்; ராணுவ வீரர்களின் மன உறுதி பலப்படும்” – விஷ்ணு தேவ் சாய் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 08, 2026 6:03 PM IST

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியைக் கொண்டாடியது வீரர்களின் மன உறுதியை வலுப்படுத்தும் என முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்துள்ளார்.

News18
News18

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய், “பிரதமர் நரேந்திர மோடி, பஸ்தருக்கு நேரில் வந்து வீரர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடியது, அவர்களின் வீரத்திற்கு அளிக்கப்பட்ட கௌரவமாகும்; இது அவர்களின் மன உறுதியை மேலும் வலுப்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்தர் பகுதியில் ராணுவ வீரர்களுடன்  பிரதமர் மோடி இன்று தீபாவளி கொண்டாடினார். பிரதமராகப் பதவியேற்று 2014 தொடங்கி 2026 வரை 13 தீபாவளிகளை ராணுவ வீரர்களுடன் கொண்டாடியுள்ளார். மோடி நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் இன்று வரை அவர், டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீபாவளியைக் கொண்டாடவில்லை. மாறாக, ராணுவ வீரர்களுடனேயே ஒவ்வொரு தீபாவளியையும் கொண்டாடி வருகிறார்.

அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் இந்த தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடி மகிழ்ந்தார்.

பிரதமர் மோடி சத்தீஸ்கரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடியதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய், “பிரதமர் நரேந்திர மோடி இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பஸ்தருக்கு வருகை தந்து, அங்குள்ள வீரர்களுடன் பண்டிகையைக் கொண்டாடினார். இது பஸ்தருக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

ஒரு காலத்தில் நக்சலைட் பாதிப்புக்குள்ளாகியிருந்த பஸ்தரில், பிரதமரின் ஆசியால் நக்சலிசம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள வீரர்களின் அளப்பரிய வீரத்தினால், இன்று அங்கு அமைதியும் வளர்ச்சியும் நிலவுகிறது. பிரதமர் நேரில் வந்து வீரர்களுடன் இணைந்து கொண்டாடியது, அவர்களின் வீரத்திற்கு அளிக்கப்பட்ட கௌரவமாகும்; இது அவர்களின் மன உறுதியை மேலும் வலுப்படுத்துகிறது.

#WATCH | Jashpur: On PM Modi’s visit to Bastar today, Chhattisgarh CM Vishnu Deo Sai says, “PM Narendra Modi visited Bastar today on the occasion of #Diwali and celebrated with jawans. This is a matter of pride for Bastar. Bastar was once Naxal-affected. With the blessings of the PM, Naxalism has been eliminated from there. With the great valour of the jawans there, there is peace and development there. PM’s arrival among the jawans there and celebrating with them is an honour to their valour. This boosts their morale. On behalf of the people of Chhattisgarh, I thank the Prime Minister. We will take Bastar ahead on the path to development.”


— ANI (@ANI) November 8, 2026

சத்தீஸ்கர் மக்கள் சார்பாக, பிரதமருக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் பஸ்தரை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக பஸ்தரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, அங்கு உரையாற்றிய போது, “ஒரு காலத்தில் நக்ஸலிசம் கோலோச்சிய இந்தப் பகுதி இன்று வளர்ச்சியடைந்து வருகிறது. மாவோயிச பயங்கரவாதத்திற்கும் நக்சலிசத்திற்கும் எதிரான போராட்டம் எளிதான ஒன்றல்ல” எனப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

சிக்கிமில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய ராஜ்நாத் சிங் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In